உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3768 கம்பன் கலை நிலை இந்த ஆண்டகையின் உள்ளக்கை உருக்கி வருவதை உரைகள் தோறும் உணர்ந்து வருருேம். அந்தப் பறவையைக் குறித்துப் பேசும் போதெல்லாம் எந்தை, என் தாதை என உரிமையோடு உரைத்து வருகிருன். நன்றியறிவும் உறவின் பாசமும் அன்புரிமையும் இவ் வென்றி விரன்பால் என்றும் இறைமை கொண்டுள்ளன." தாழ்விலாத் தவத்தோர் தையல். சீதையை இங்கனம் குறிக்கது அவளது கற்பின் மகிமை யைக் கருதி. தாய நெறியில் எவ்வழியும் களராமல் உயர்ந்து நிற்கும் நீர்மை உணர வந்தது. கிவஞான சீலனை சனகனு \டைய அருமை மகள் ஆகலால் அந்தப் பிறப்பின் சிறப்பும் தெரிய நின்றது. பலவகை கலங்களும் பொருந்தியுள்ள பேரழகி என்பதைக் தையல் என்னும் சொல் விளக்கியுள்ளது. இத்தகைய உத்தமியை எடுத்துக் கொண்டு போய்ச் சிறை யில் வைத்துள்ளவன் கொடிய நரக துன்பக்கை அடைவான் என இவ் விரன் (Քւջ-*| செய்திருக்கிருன். உள்ளக் கொதிப்பு கள் எல்லே மீறி எழுந்துள்ளமையால் வாய்மொழிகள் தி ஒளி களை விசி வெளி வந்துள்ளன. எரி நரகம் என்னும் சிறையில் வைப்பேன். கன் மனைவியைச் சிறையில் வைக்க இராவணனைச் சித்திர வதை செய்து உடலை நாய் நரிகளுக்கு இரையாக்கி உயிரைக் கொண்டு போய் மீளா நரகத்தில் ஆழமாகச் சிறை வைப்பேன் என இராமன் இவ்வாறு ஆங்காரக்கோடு பேசி யிருக்கிருன். கனக்குத் துயர் இழைத்துத் தன் குடிக்குப் பழி விளைத்த வனே அடியோ டு அழித்து அடு கர கத்தில் ஆழ்த்துவேன் என்று ஆர்த்திருப்பது அடலாண்மைகளை வார்த்துக் காட்டி கிற்கிறது. களவு நிலையில் உளவு கெரிய வந்த ஒற்றர்களிடம் இன்ன வாறு பலவும் தெளிவாகக் கூறி இலங்கை வேங்கனிடம் போப் யாவும் ஒளியாமல் சொல்லும்படி அளிசெய்து விடுத்திருத்த லால் இராமனது அதிசய பாக்கிரமமும் விதி முறையும் விர கம்பீரமும் யாரும் அறியப் பேரொளி செப்து நிற்கின்றன.