உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3778 கம்பன் கலை நிலை காலாட் படையே இவ்வளவு தொகை உள்ளது என்பான் அரக்கர் தானை ஆயிரம் வெள்ளம் என்ருன். யானைப் படை, குதி ரைப் படை, தேர்ப்படை முதலாக வேறு பல படைகளும் உள் ளன என்று உள்ளம் களித்து ஊக்கிப் பேசி நின்ருன். இங்கே கூறிய சேனைத் திறங்கள் கூர்ந்து சிந்திக்கஉரியன. தக்தி ஒன்றே தேர் ஒன்று சாதியாம் புரவி மூன்று வந்தடும் பதாதி ஐந்து வகுத்திடும் பத்தி என்ப; உங்தும்அப் பத்தி மூன்றே உறின் சேமுைகம் என்ருகும்: முந்துசேன முகம்தான் மும்மடி குல்ம மாமே. (1) மருவிய குல்மம் மூன்று மடிதானே கணம தாகும்; கருதிய கணமே மூன்று காட்டிய வாகினிப்பேர்; பெருகு வாகினிதான் மூன்று பிருதனே ஆகும் என்ப; வருபிரு தனைதான் மூன்று வகுத்திடும் சமூவாகும்மே. பேரியல் சமூவே மூன்று பிரளயம் பிரளயம்தான் ஒர்மூன்றே சமுத்திரமாகும் உயர்சமுத்திரம் ஒர்மூன்று தேர்தரு சங்கு சங்குமூன்றதே அணிகம் என்ப சோர்விலாஅணிகம் மூன்றே சொல்லும்அக்குரோணியாமே. (நிகண்டு) மண்டல புருடனர் இப்படிக் குறித்திருக்கிரு.ர். படைகளின் நிலைமை தலைமைகளை இன்னவாறு முன்ஞேர் வரம்பு செய்து வைத்துள்ளனர். போர் முறைகளில் இந் நாடு பீடு பெற்றிருந்த வகைகளையும் பேரரசர்களுடைய ஆட்சி நிலை களையும் இத் தொகைகளால் ஒரளவு அறிந்து கொள்ளுகிருேம். எல்லையில்லாத சேனைகள் கம்பால் உள்ளன என்று உள்ளம் செருக்கியுள்ளமையால் எதிரிகளை எள்ளலாக அவன் இகழ்ந்து பேச நேர்ந்தான். மன்னன் மனம் களிக்க உன்னி உரையாடி ன்ை. வாய்மொழிகள் மனத் துடுக்கை வெளிப் படுத்தி நின்றன. காய் இனம் சியம் கண்டதாம். சேனைகளின் பெருமிக நிலைகளை உரைத்து வந்த சேனைக் தலைவன் இலங்கேசனுடைய விரப் பிரதாபங்களை இவ்வாறு எடுத் துக் கூறினன். உருவகவுரை உள்ளக் கருக்கை உணர்த்தியுளது.