உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3816 கம்பன் கலை நிலை கொண்டு மீண்டு வந்து இராமன் அடியில் வைத்து வணங்கி நிற் பதையும், அவனை விழைந்து கழுவி இவ் வீரன் கடிந்து மொழிக் துள்ளதையும் இங்கே வியந்து கண்டு உவந்து நிற்கிருேம். விர வெற்றிகளோடு அன்புரிமைகளும் பண்பு கலங்களும் சுரந்து அரிய பல மேன்மைகள் ஈண்டு விரிந்து மிளிர்கின்றன. அெழுது அயர் உறுகின்றன். என இராமனை இங்ங்னம் எழுதிக் காட்டியிருக்கிரு.ர். உற்ற நண்பன் எதிரி கையில் சிக்கித் துயருழந்து உயிரழிக் தான் என்று எண்ணவே உள்ளமும் உயிரும் நிலை குலேந்து துடித்துள்ளன. இவ் வீர வள்ளல் தனது அதிசய ஆற்றல்களை யெல்லாம் அறவே மறந்து அலமந்து பதைத்திருக்கிருன். உரிய |துணைவன் பறிபோனது உயிர் போனது போல் ஆகவே அரிய செயல்கள் யாவும் இழந்து அலமாவடைந்தான்) இந்த நிலையில் அவன் வந்து சேர்ந்துள்ளது தெய்வீக விங் கையாய் விளங்கி நின்றது. நிகழ்ச்சிகள் அதிசய வியப்புகளா யுள்ளன. உரியவன் வரவு உவகை வாரியாய் ஒங்கியது. துரயவர் இருவ ரோடும் எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர்உயிர் எய்திற்று. சுக்கிரீவன் வந்து சேர்ந்த நிலைமையில் அங்கே நின்றவர் எல்லாரும் எய்திய இன்ப நிலையை இது இனிது உணர்த்தியுளது. துயவர் இருவர் என்றது இராம லட்சுமணரை. பரிசுத்தமான கரும குன சீலர் என்பதை இப் பெயர் தலக்கி கின்றது. மாசற்ற கேசுகள் மதி தெளிய வந்தன. - இந்த இருவரோடு எழுபது வெள்ளம் வானங்களுக்கும் சுக்கிரீவன் ஓர் உயிர் என்றது. ஈண்டு ஊன்றி உணர வுரியது.அவ லுடைய நிலைமை தலைமைகளை இவ்வளவு அழகாக விளக்கி யிருக் கிருர். கவிஅரசைக் கவிஅரசு காட்டியது சுவையை யூட்டியுளது. அவன் அயலே தாவிப் போன போதே இம்மான வீரரும் சேனைத் திரள்கள் யாவும் ஆவி போனது போல் அயர்ந்து அல மந்து நின்றுள்ளதை இவ் வுரைக் குறிப்பு நன்கு உணர்த்தியது. செயலிழந்து அயர்ந்து கின்றவர் எல்லாரும் சுக்கிரீவனேக் கண்டதும்உயிர்பெற்றவர்போல் உவந்து கொண்டாடியுள்ளனர்.