உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3871 அறிந்து கொள்ள வந்தது. வேலை கலக்கினன் மைந்தன் ஆதி லால் என் வேலையையும் நீ சிந்தனே செய்து கொள்க என்று தெளித்தருளின்ை. முதலில் தன்னைத் தாது அனுப்பிய ஆண்டவனுடைய மகி. மைகளை உரைத்தான். கன் பிறப்பு முதலிய சிறப்பு நிலைகளை உணர்த்தினன். குறிப்புகள் பல உணரக் கூர்ந்து கூறினன். இலங்கை வேங்கனுடைய உள்ளச் செருக்கை அகழ்ந்து எடுத்து உறுதி கூறும் முறையில் உரைகள் பெருகி வங்துள்ளன. இவ்வா.அ. உரையாடி வருங்கால் அனுமானைப் ப ற் றி ய பேச்சு இடையே புகுந்தது. 'உன்னைப் போல முன்னம் இராம அாதன் என ஒரு குரங்கு இங்கே வந்தது; இப்பொழுது அது எங்கே யுள்ளது?’ என்று இராவணன் கேட்டான். யாதும் தெரியாதவனைப்போல் பாவனைசெய்து யார்.அது 2: என்று அங்கதன் வினவினன். இங்கித மொழிகள் எதிர் எழுந்தன. சங்கை சமாதா னங்கள் சார்ந்து வந்தன. இராவணன்: அனுமான் என்னும் பேரோடு ஈண்டு வந்தான்; வாலிலே வைக்க கீயை இவ்வூரிலே வைத்துவிட்டு ஒடிப்போன்ை. அங்கதன்: அடே! அவன? இராவணன்: அவன் இப்போது ங்கே இருக்கிருன்? அங்கதன்: அவனே எங்கள் சாதியைவிட்டு விலக்கிவிட்டோம். இராவணன்: ஏன்? என்ன பிழை செய்தான்? - அங்கதன்: இங்கே வந்திருக்க போது இந்திர சித்தின் கையில் கட்டுப்பட்டான் ஆகலால் அது எங்கள் மரபுக்கே பெரிய இழிவாய் நேர்ந்தது; அப்படிக்குலத்துக்கு இழுக்கு விளைத்தவனைச் சேர்த்து வைத்திருப்பது கொடிய ஈனம் என்று வெறுத்து எம்மவர் அவனே விலக்கிவிட்டனர். மானமுடைய நாங்கள் ஊன மடைந்து வாழமாட்டோம். ஊறுபாடுற்றவரை வேறுபாடாகவே விலக்கிவிடுவோம். இராவணன்: அவன் எங்கே போயுள்ளான்?