உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3910 கம்பன் கலை நிலை பாதசாரியாய் நிற்கலாகாது என்ற மான வுணர்ச்சியால் மறுகி வேண்டி மாருதி உரிமையோடு உவந்து தாங்கியிருக்கிருன். கோதண்ட விரன் கன்மேல் எறி அமர்ந்தபோது அனுமான் உள்ளம் பேரானந்தத்தில் பொங்கி எழுந்து. கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான். போர்க்களத்தில் இராமனைத் தாங்கி நின்ற அனுமானக் கவி இங்ங்னம் காட்டியிருக்கிரு.ர். உற்ற பிள்ளையைப் பெற்ற தாய் ஏந்தி நிற்றல்போல் இக்கோமகனை அம் மாமகன் தாங்கி மகிழ்ந்துள்ளான். தாய்மையின் அன்புரிமையும் சேய்மையின் 'நீர்மையும் ஈங்கு ஒருங்கே தெரிய வந்தன. ஈன்ற கன்று என்ற கல்ை தாய்ப் பசுவின் பேரன்பே ஈண்டு உரிமையாய் ஊன்றி யுனா வந்தது. மானுடத் தாயினும் ஆனின் தாய் அதிசய அன்புடையது ஆதலால் அதனைத் துதிசெய்து குறித்தார். மனிதத் தாய் செவிலித் தாயிடமும் கன்பிள்ளையைக் கொடுத்து வளர்க்கச் செய்வாள்; புனிதப் பசு அவ்வாறு இசை யாது; உருகி நக்கிப் பரிவுபொங்கிப் பால்சொரிந்து தன் கன்றை அது பேணி வரும் அன்புரிமை என்பும் உருக இன்பம் சுரங்து வரும். தாய்மை அன்புக்கு ஆவின் பரிவையே காவியக் கவிகள் உவமை கூறி வருதலால் அதன் பான்மையும் மேன்மையும் பயனும் நயனும் நன்கு அறியலாகும். "கன்று பிரி காராவின் துயருடைய கொடி” (குகப்படலம்) இராமனைப் பிரிந்து வருந்திய கோசலையை இ ங் எ ன ம் குறித்திருக்கிருர். அந்தக் காராம் பசு பிரிந்த கன்றை இங்கே ஒரு வானரம் தோளில் தாக்கி வைத்துக் கொண்டு ஆனந்தம் மீதுார்ந்துள்ளது. ஈன்றகன்று என்றது தானே பரிந்து பெற்ற - இளங்கன்று என அன்புரிமையின் எல்லையை அளந்து அறிந்து உள்ளம் தெளிந்து உவந்து கொள்ளவந்தது. கோசலைத் தாயினும் அனுமான் இங்கே இராமனை உழுவ லன்போடு பேணி உருகிப் போற்றி வருதலைக் கருதி நோக்கு வார் எவரும் உள்ளம் கரைந்து உவந்து ஏத்துவார். அந்தக் காய் தன் பிள்ளையை அரச போகத்தில் வளர்த் தாள். இந்தத் தாய் அந்தப் பிள்ளையை அமர்முகத்தில் யாதொரு