உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3921. சிறந்த புலமைவாய்ந்த உயர்ந்த கவிஞன் உள்ளம் கனன்று ஒரு வசைமொழி உரைத்தால் எல்லாச் செல்வங்களையும் இழந்து எவனும் இழிந்து போவன்; அதுபோல் இராமன் எதிரே! இராவணன் அன்று அழிந்து போனன் என்க. o . அழிவுநிலை பெரிதாய் எளிதே நிகழ்ந்துள்ளது; அந்நில்ைம்ை யைத் தெளிந்து கொள்ள இங்ங்னம் மொழிந்தருளினர். அங்கதம் = வசைமொழி, வசைப்பாட்டு. உள்ளே கதம்கொண்டு சொல்லுவது; கதத்தை அங்கமாக வுடையது; என்னும் ஏதுவான் வந்தது. கதம்=கோபம். - மனம் கனன்று முனிவர் சபிப்பது சாபம்; கவிஞர் சொல் வது அங்கதம். நேரே கிங்தையாகவும் கிக்காத் துதியாகவும் கவி ஞர் பாடுவர் ஆதலால் அங்கதம் இரண்டு வகையாய் நின்றது. 'அங்கதம் தானே அரில்தபத் தெரியின் செம்பொருள் கரந்தது என இரு வகைத்தே. (1) செம்பொருள் ஆயின் வசைஎனப் படுமே. (2) மொழிகரந்து சொல்லினது பழிகாப் பாகும். (3) - (கொல்காப்பியம்) அங்கதத்தைக் குறித்து ஆசிரியர் கொல்காப்பியனர் இங்ங் னம் உரைத்திருக்கிரு.ர். முனிவர் சாபமும் அருளும் புரிந்து வருகல்போல் கவிஞர் கோபமும் குணமும் கொண்டாடி வரு கின்றனர். அந்தக் கோபச் சொல் அங்ககமாய் வருகிறது; அகனல் கொடிய குடிகேடுகள் விளைந்து விடுகின்றன. முடி இழந்த அரக்கன் கவிஞர் சொல்லால் குடி அழிந்தவன் போல் ஆன்ை என்றது இங்கே ஆய்ந்து சிந்திக்கவுரியது. - கவிஞரீைக் குறித்து நம் கவிஞர்பிரான் تھا۔ I வ்வளவு மகிமை, - யாக் கருதியுள்ளார்! என்பதைக் காவியத்துள் பல இடங் களிலும் நாம் கண்டு வருகிருேம். -- - சொல் ஒக்கும் சரம் என் இராமன் அ ம் பு க் கு முனிவர் மொழியையும், கவிஞர் சொல்லையும் கலந்து குறித்து வருதலை துணுகி உணர்ந்து கொள்ளுகிருேம். காகுத்தன் பகழி கவிஞர் நாவின்சொல்.” (கும்பகருணன் 22) 491 == ■ _