உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3922 கம்பன் கலை நிலை இராம பானத்துக்குக் கவிஞர்சொல்லை இங்கனம் உவமை கூறியிருக்கிருர். உள்ளம் கனன்று கவிஞர் சொல்லுகிற சொல் எல்லையில்லாத வலியுடையதாய் ஒல்லையில் கேடுகளை விளேத்து விடும் ஆதலால் பகைமையின் அல்லல்களை நீக்கி எல்லாவகை யிலும் வெல்ல வல்ல இராமன் அம்புக்கு அது ஒப்பாய் வந்தது. கவிஞர், இராமனுக்கும்; அவர் கா, வில்லுக்கும்; சொல், அம்புக்கும் ஒப்பாம். அரிய செல்வங்கள் நிறைந்து பெரிய புக ழோடு ஒருவன் ஓங்கியிருந்தாலும் கவிஞருடைய வசைச் சொல் விழுந்தால் அவன் எல்லா கலங்களும் இழந்து இழிந்த பழியாள குய் அழிந்து போவான் ஆதலால் இராமன் எதிரே தோல்வி அடைந்து இழிந்து நின்ற இராவணனுக்கு அவன் உவமையாய் வந்தான். அளவிடலரிய பெருமைகள் எல்லாம் அடியோடு போய் அவன் மறுகி நின்ற நிலை உவமையால் அறிய வங்கது. கவிஞர் சொல்லால் எவரையும் எளிதே வெல்லவல்லவர்; இராமன் வில்லால் யாரையும் ஒல்லையில் வெல்ல வல்லவன். அவர் கோது நீக்கிக் குணம் காண்பவர்; இவன் இது நீக்கி நீதி காண்பவன். சொல்லை ஏராகவுடைய அவரைப் பகைப்பவர் அடியோடு அழிவர்; வில்லை ஏராகவுடைய இவனைப் பகைப்பவர் குடியோடு ஒழிவர். இருவர் நிலைகளும் பொருவரு வலியின. வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை.” (குறள், 873) வில் வீரரையும் சொல் வீரரையும் தேவர் இதில் ஒருங்கே குறித்திருக்கலைக் கூர்ந்து நோக்குக. வில்லாளரைப் பகைப்பதி லும் சொல்லாளரைப் பகைப்பது கொடிய குடி கேடாம்; அவ ரை யாதும் பகையாமல் எவ்வழியும் இனிது பேணி வாழுக என உலகவர்க்கு உரிமையோடு இது உறுதி போதித்துள்ளது. சொல்லால் உலகாளும் சுந்தரர் எனக் கவிஞர் ஈண்டு வந்துள்ளமை சிந்தனை செய்து தெளிந்து கொள்ளத்தக்கது. கவிஞர்சொல் அதிசய ஆற்றலுடையது; இவரைப் பகைத் கவர் இராமனேப் புகைத்த இராவணன்போல் அ டி .ே ய ர டு