உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3628 கம்பன் கலை நிலை - - f வண்மை பெரிய நன்மை ஆகின்றது. அதனே இழந்து விடுவது இழிக்க பரிதாபமாம். இவன் என்ன நிலையில் வந்திருந்தாலும் அபயம் என்று சொன்ன வுடனே அபயதானம் அளிப்பதே எனது கடமையாம். நான் செய்ய வுரிய கடமையைக் குறித்து உற்ற துணைவர்களாகிய உங்களிடம் உரிமையோடு உசாவி னேன்; நீங்களும் உறுதி கலங்களைப் பிரியமாய் உரைத்தீர்கள்; அரிய உண்மைகள் அறிய வந்தன; இனிமேல் தாமதித்து இருப் பது தவறு, சுக்கிரீவா நீயே போப் அபயம் புகன்ற அந்த உரி மையாளனே விரைவில் இங்கே அழைத்து வா!' &T ன் அது இவ்வா அறு இராம ன் உரைக் தருளி ன்ை. இந்த உரைகளிலிருந்து அரிய பல உண்மைகளை நாம் உணர்த்து கொள்ளுகிருேம். காவிய நிகழ்ச்சிகள் ஒவியக் காட் சிகளாப் ஒளி புரிந்து மிளிர்கின்றன. அனுமான் பேசிய மொழி களைக் கேட்டு இராமன் பரவசமடைந்திருக்கிருன். மாருதி வினய வார்த்தை செவிமடுத்து அமிழ்தின் மாந்தி. அந்தக் கேள்வியின் மேன்மையும், கேட்டவன் பான்மை யும், பேசினவனது பெருமையும் இகளுல் ஒருங்கே தெரிந்து அவனது பிறப்பின் சிறப்பையும் தெய்வப் பெற்றியையும் கருதி புணர. மாருதம் = காற்று. அங்க வாயுபகவானுடைய மகன் மாருதி என வங்கான். தசரதன் மகன் தாசரதி என வந்து மா சரிதங்களை கடத்துகிருன். அவ்வாறே மா ருதியும் வந்து பார காரியங்களை அவன் பக்க மிருந்து பணிவுடன் செய்கிருன். மனித உருவிலும் வானா வடிவிலும் மருவி யிருந்தாலும்அரிய பல தெய் வீக நீர்மைகள் இருவரிடமும் பெருகியுள்ளன. ஒருவரை ஒருவர் உரிமையோடு உசாவி உலகம் கலமுற உதவி வருகின்றனர் காற்று எங்கும் விரைந்து செல்ல வல்லது. நுண்ணிய எவ்வழியும் புகுந்து உலாவி வருவது. அந்த ஆற்றல்கள் காற் றின் சேயிடமும் ஏற்றமுற்றுள்ளன. இவனுடைய அறிவு யாண் டும் பரந்து செல்வது; யாரும் அணுகியறிய முடியாத துணுகிய பொருள்களை எளிகே தெரிந்து கெளிவாக வெளியே வீசியருளு கின்றது. எவ்வழியும் ஒளி புரிந்து இனிதே உதவி வருகிறது.