உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3652 கம்பன் கலை நிலை நிற்கிருன். இந்தக் குழுவின் இடையே இராமன் அமைதியாய் அமர்ந்திருக்கிருன். கரிய கடல் பல செந்தாமரை மலர்களைப் பூத்து அதிசய நிலையில் அமர்ந்திருந்தது போல் பசிய கோலத் திருமேனியனை இக் கோமகன் அங்கே குலாவி விளங்கினன். அரக்கர்கள் புரிகின்ற அல்லல்களை நீக்கிக் கம்மை ஆகரித்தருளு மாறு முன்னம் தேவர்கள் தொழுது வேண்டியபொழுது பாற் கடலிலிருந்து பள்ளி நீங்கி எழுந்தது போல் வெள்ளிய மணல் பரப்பில் அன்று அவ்வள்ளல் வயங்கி யிருந்த காட்சி எவருடைய உள்ளங்களையும் உருக்கி நின்றது. சிகையின் கண்மணி போல் அக் கார்வண்ணன் கனிந்து தோன்றினன். அந்தச் சுந்தரனு டைய மார்பும் கோளும் இந்திரவில் நீங்கிய மேகம் போலவும் மங்கர மலை போலவும் மருவி எழுந்து பருவ சோதிகளை விசி கின்றன. பூரண சந்திரன் போல் பொலிவு மிகுந்து முகம் ஒளி சுரங்து விளங்கியது. இந்த நிலையில் அமர்ந்திருக்க இராமனே விடனன் வந்து கண்டான். காணவே உள்ளம் உருகியது; கண்ணிர் வெள்ளம் பெருகியது; தன் பிறவி தீர்ந்து பேரின்பம் பெற்றவன் போல் நேரே விரைந்து நெருங்கி ஆரா அன்போடு அடியில் விழுந்து கொழுதான். அங்கனம் கொழுத அவனை உழு வலன்போடு உவந்து நோக்கி அருகே அமர்ந்திருக்கும்படி பணித்தான். பரவச நிலையில் அவன் உருகியிருந்தான். அன்பு நலன்கள் கனிக்க இந்த அதிசயக் காட்சிகள் எல்லாருக்கும் அங்கே இன்பம் புரிந்து கின்றன. o சரித நிகழ்ச்சிகளைக் கவி எழுதிக் காட்டி யிருப்பது விழு மிய நிலைகளை விளக்கியுள்ளது. கருதி புனருந்தோறும் உள்ளம் உருகி உவகை பெருகி வருகிறது. பாற்கடல் சுற்ற விற்கை வடவரை பாங்கு நிற்பக் கார்க்கடல் கமலம் பூத்தது எனப் பொலிவானைக் கண்டான். விபீடணன் கண்டபோது இராமன் இருந்த காட்சியைக் கவி இப்படி நமக்குக் காட்டி யிருக்கிரு.ர். வெண்மையான சேனைத்திரள் எங்கும் புடை சூழ்ந்திருக்கது. ஆதலால் அது பாற் கடல் என நேர்ந்தது. * - ஒரு பொன்மலை வில்லைக் கையில் ஏந்திக் கரிய கடல் அருகே மருவி கின்றது போல் இலக்குவன் அண்ணன் அயலே நின்ருன்