பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,056 கம்பன் கலை நிலை அழுகையால் கண்கள் சிவந்து கின்றன. இரத்தக்கண்ணிர் வ. ங்தது போல் விழி நீர் வெளியே விரிந்து தெரிந்தது. தறுகண் என்றது அவனுடைய அடலாண்மையைகினைந்துவந்தது. யாண்டும் கலங்காகவன், எதற்கும் அஞ்சாதவன்; அதிசய விசயமான உக்கிர விரன்; அத்தகைய திண்மையாளன் ஈண்டு கெஞ்சம் கரைந்து நெடிது அழுதிருக்கிருன். பிறந்தது முதல் இதுவரையும் துன்பம் இன்னது என்று தெரியாதவன், எவ்வ கையிலும் யாதும் அழுது அறியாதவன்; இன்று இவ்வாறு پیا) | عـ திருக்கிருன். உதிர சம்பந்தம் உள்ளத்தை உருக்கியுள்ளது. அண்ணன் அவகேடாப்க் குலகாசம் செய்ய மூண்டுள் ளான்; குடும்பம் பல வகையிலும் பரிசு குலைந்து அழிந்துபோய் விடும்; அந்த அழிவுநிலையைக் கண்ணுல் பார்த்திருக்கக் கூடாது; முன்னதாகவே இறந்து போய்விட வேண்டும் என்று துணிந்து போருக்கு வந்தான்; கமையனே வெறுத்து வெளியேறிப் போயி ருங்க கம்பி இடையே எதிர் வந்து தொழுது குடும்ப நிலைகளின் இடும்பைகளை யெல்லாம் குறித்துக் காட்டித் தன்னேடு சேர்ந்து கொள்ளும்படி மறுகி மன்ருடுகின்ருன். இளையவனுடைய அன்புரிமைகளும் எதிர்ந்துள்ள துன்ப நிலைகளும் உள்ளத்தை உருக்கி உயிரைச் சூறையாடியுள்ளது; ஆகவே கண்ணிர் வெள்ளம் பெருகி ஒட நேர்க்கது. விரைந்து இறந்துபோவோம்; இனி இந்தக் கம்பியை என்று காண்போம்?' என்னும் பரிவும் பிரிவும் பாசமும் ஆர்வமும் உள்ளே பெருகி ஓங்கியுள்ளன. அந்த உண்மையை மறுகி எங்கி, அழுதுள்ளமை வெளியே உணர்த்தி உரிமைப் பாசங்களை நன்கு விளக்கியுள்ளது. அன்பின் பரவசமாய்க் கம்பியைத் கழுவி விழிநீர் சொரிந்து சிறிதுபோது பேசாமல் அயர்ந்து நின்றவன் பின்பு:பேசலாளுன். கும்பகருணன் கூறியது. நீர்க்கோல வாழ்வை நச்சி கெடிதுங்ாள் வளர்த்துப் பின் சீனப் போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்குப் (போகேன் தார்க்கோல மேனி மைந்த என்துயர் தவிர்த்தி ஆயின் கார்க்கோல மேனி யானேக் கூடுதி கடிதின் என்ருன். (1)