பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4067 தன்னை விரும்பி அழைத்த கம்பிக்குக் தமையன் இன்னவாறு தனது உறுதி நிலை தெரியப் பதில் உரைத்துள்ளான். வாழ்வது உனக்குத் தகவு, சாவது எனக்குப் புகழ் என்று உரைத்திருக்கிருன். இங்க உரையின் குறிப்புகள் ஊன்றி உணர 'வுரியன. விரமும் மானமும் விர வி மிளிர்கின்றன. * கருத்து இலா இறைவன் என்றது இராவணனது நிலைமை யைக் கருதி வருத்தமாய் வந்தது. உறுதி நலங்களைக் கருதியுண ரும் கருத்து இல்லாமையால் இறுதி நேர்ந்துள்ளது என இரங்கி யிருக்கிருன். விளைவின் உளவு தெரிய அளவுரை அமைந்தது." * உரிய அரசன் அறிவு கேடனப்த் தீமை புரியின் உறவுரிமை யுடையார் அறிவு நலங்கள் கூறி அவனைத் திருத்தவேண்டும்; திருந்தவில்லையானல் அவனே இழந்துவிட்டு அயலே மாருப் ச்வறிடம் போகக் கூடாது. அந்த அரசனுக்கு அழிவுசேருமுன் எந்த வகையிலாவது இறந்து போக வேண்டும். அதுதான் உண்மையான உறவின் தன்மையாம். ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது. ஒரு அரசைேடு உறவுகொண்டிருக்கவர் அவனுக்கு இடை யூறு நேர்ந்தபோது நடந்துகொள்ளவேண்டிய கடமையை இவ் வாறு வரைந்து காட்டியிருக்கிருன். கான் மருவியிருந்த அரசனே எவ்வழியும் ஒருவி நீங்கலாகாத; சுகமோ துக்கமே அவைேடு கூடியிருங்கே அனுபவித்து அவனது மேன்மையை யாண்டும் கேண்மையாய்ப் பேணிக் கெழுதகைமை புரிய வேண்டும். "பிறையது வளரத் தானும் வளர்ந்துடன் பெருகிப் பின்ள்ை குறைபடு மதியம் தேயக் குறுமுயல் தேய்வ தேபோல் இறைவனத் தன்னே ஆக்கி யவன்வழி ஒழுகின் என்றும் கிறைமதி இரு2ளப் பொழும் நெடும்புகழ் விளக்கும் என்ருன்.' (சீவகசிந்தாமணி) அரசனேடு பழகியவர் மதியோடு மருவிய முயல்போல் இருக்கவுரியர்; மதியினுடைய வளர்ச்சியிலும் தேய்விலும் அது ஒரு நிகராய் மருவி நிற்கும்; அதுபோல் அரசனுடைய வளர்வு தளர்வுகளிலும் அமைச்சர் கிளையமைந்திருக்க வேண்டும்; அவ் வாறு இருந்து வரின் கிருந்திய பெரும் புகழ் விளைந்து வரும் எனத் தருமதத்தன் a ன்ம்ை ந்திரி இங்கவாறு கூறியிருக்கிருன்.