பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4068 கம்பன் கலை நிலை மன்னனைச் சார்ந்து ஒழுகும் மந்திரிகளே இன்னவாறு என்னவகையிலும் அவளுேடு பின்னிப் பிணைந்து இருக்க வேண் டும் எனின் உடன்பிறந்த தம்பியர் என்ன நிலையில் அமைந் திருக்க வேண்டும் என்பது ஈண்டு உன்னி உணர வந்தது. அரிய இராச மரியாகையையும் உரிய உறவையும் நன்றியையும் இந்த வீரத் கம்பி இங்கே உறுதிசெய்து நின்றுள்ளான். : தன்னுடைய அண்ணனம் பிரிந்து அகல்வது எண்ணவும் முடியாத இழிபழி என்று கும்பகருணன் எண்ணியிருக்கலை உரைகள் உணர்த்தி கிற்கின்றன. { தம்பியர் இன்றி மாண்டு கிடப்பனே தமையன் மண்மேல். உம்பர் உலகமும் இம்பர் உலகமும் ஒருங்கே ஆண்டு வந்த உயர் குல வேந்தன் துயர் நிலையில் விரைந்து மாண்டுபடுவான் என்பதை ஈண்டு இது விளக்கி நின்றது. இரண்டு தம்பியரோடு பிறந்து அகிலமும் கொழ வாழ்ந்தவன் ஒரு துணையும் இன்றித் தனியே இறந்து கிடக்க விடுவது அகியாயமாம் என அலமந்து மொழிந்துள்ளான். இளைய கம்பியாகிய நீ விலகிப் போனலும் சான் ஒருவனவது அண்ணனேடு துணையாய் இறக்கவேண்டும்; என்னை உன்னேடு வரும்படி வீணே அழைக்காதே என்று பின்னவனிடம் இன்னலோடு இன்னவாறு பேசியிருக்கிருன். இராம பானங்களால் அடிபட்டு இறந்து இராவணன் கரையில் வீழ்ந்துகிடக்கும் பரிதாபக் காட்சியை முன்னதாகவே கும்பகருணன் கருதி மறுகி இருக்கலை இவ்வுரையால் உணர்ந்து கொள்ளுகிருேம். எதிர்வதை எண்ணி உள்ளம் ஏங்கியுள்ளான். அழிவு மூண்டுள்ள நிலைமையை இவனுடைய உள்ளம் தெளிவு பூண்டுள்ளமையால் உரைகள் உறுதி செய்துள்ளன. அநாதியாய்ச் செத்தான் என்ற அவப்பழி நேராமல் சாவி அம் ஒருதம்பி துணையா யிறந்தான் என்னும் பெருமையை அண் ண னுக்கு உரிமையோடு உதவுவதே நான் பிறந்து வ க் க தி ன் சிறந்த பயனும் என்று இவன் துணிந்து நிற்றலை உணர்ந்து பரி வோடு நாம் இனைந்து இரங்கி நிற்கிருேம். பகையை வாழ்த்தி கான் கும்பிட்டு வாழ்கிலேன்.