பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4095 கடுத்த அயலே போனன்.)அடுத்துவந்த சேனைகள் கொதித்து மூண்டு இலக்குவனச் சூழ்ந்து வளைந்து கொண்டன. இளவலது வீரப் போர். கொடிய போர் வீரர்களான நெடிய அரக்கர் படைகள் கடி.து வந்து வளையவே அடுதிறலோடு இளையவன் படுகளம் முழுவதையும் பாழாக்கினன். யாண்டும் கலங்காக இலங்கைப் படைகள் ஈண்டு மூண்ட போரில் ஈசல் மடிந்ததுபோல் நாச மாப் மாண்டு படிக்கன. இளையவனுடைய வில்லாடலில் விர தேவதை உல்லாச வினேகமாப் எவ்வழியும் விளையாடி வந்தது. அதனுல் எல்லா இடங்களிலும் எல்லை கடந்த அழிவுகள் ஒல்லை யில் விளைந்தன. நால்வகைப் படைகளும் நாசமாயின. கரியின் கைகளும் புரவியின் கால்களும் காலின் திரியும் தேர்களின் சில்லியும் அரக்கர்தம் சிரமும் சொரியும் சோரியும் அறைதொலும் அதுறைதொறும் சுழிப்ப நெரியும் பல்பிணப் பெருங்கரை கடந்தில நீத்தம். கொற்ற வாள் எழுத் தண்டுவேல் கோல்மழுக் குலிசம் மற்றும் வேறுள படைக்கலம் இலக்குவன் வாளி சுற்றும் ஒடுவ தொடர்ந்திடை அணித்திடத் தொகையா அற்ற துண்டங்கள் படப்படத் துணிந்தன அகந்தம். இலக்குவனுடைய போராடலில் அரக்கர் சேனைகள் அழிந்துபட்டுள்ள அழிவு நிலைகளை இவை விழி தெரிய விளக்கி யுள்ளன. அரிய திறலுடைய பெரிய போர் வீரர்கள் அனைவரும் பரிதாபமாய்ப் பட்டு மாய்ந்திருக்கின்றனர். மாய அரக்கர்கள் மாப்ந்து மடிந்திருப்பது மாய வியப்பாயிருக்கமையால் வானவர் தானவர் யாவரும் ஆனவகை யாதும் அறியாமல் அயர்ந்து மயங்கினர். புதிதாய் வந்து வளைந்த சேனைகளோடு இலக்குவன் இவ்வாறு போராடிக் கொண்டிருக்தபொழுது அயலே சென்ற * கும்பகருனனைச் சுக்கிரீவன் கண்டான். உக்கிர விரமாய் உருத்து எதிர்த்தான். அவன் கொதித்தான்; கொடும் போர் மூண்டது. கும்பகருணனும் சுக்கிரீவனும் அருந்திறனுடைய இந்த இருவரும் பொருக்திறலில் புகுந்து எதிர்ந்தது அரிய பெரிய விரக்காட்சியாய்ப் பெருகி கின்றது.