பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4123 வேண்டியிருக்கிருன். விரும்பி வேண்டியிருப்பன அவனுடைய மானச மருமங்களை வெளியிட்டுள்ளன. அதிசய விரளுன அவன் சகோதர வாஞ்சைகளால் பெரிதும் மறுகியிருக்கிருன். முன்னம் அண்ணனது முடிவை எண்ணிக் கண்ணிர் அரும் பிக் கருதி உளைக்கான்; இப்பொழுது கம்பியின் நிலைமையை கினைந்து கவித்திருக்கிருன். இருவரிடமும் ஒ ருமுகமாய் மறுகி யுருகிலுைம் இளையவன்பால் . கொண்டுள்ள பாசம் மிகவும் பெருகியுளது. குடும்பத்தைவிட்டுத் தனியே பிரித்துபோனவன்; அரச செல்வங்களை யெல்லாம் இழந்து வரிசை குலைந்து எதிரியி டம் போப் அகாதையாய்ச் சேர்ந்திருக்கிருன். அவனது போக் கும் கோக்கும் இராவணனுக்குப் பெருஞ் சீற்றத்தை விளைத் துள்ளது. அந்த விளைவுகளையெல்லாம் எண்ணி மேலே என்ன விளையுமோ? என்று விடனன் பால் கும்ப கருணன் பேரிரக்க மும் பெரும் பரிவும் கொண்டு மறுகியுள்ளான். அவ்வுண்மை களை உரைகள் நேரே உணர்த்தியுள்ளன. தன் அருமைத்தம்பி அல்லவின்றி இருக்கவேண்டுமே! என்று இவனுடைய உள்ளம் உருகியுள்ளது. அவ் வுண்மையை உரைகள் காட்டியுள்ளன. புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாகத் துலைபுக்க பெரியவன் கன் மரபில் வந்தவன் என இராமனே இங்கே அரிய கருத்தோடு குறித்து அழைத்திருக்கிருன். கன்னத் தஞ்சம் என்.று அடைந்தவர் எவராயினும் அவரை எவ்வகையாலும் கை விடாமல் ஆகரித்துக் காத்தருளும் உத்தம குலத்தவன் ஆதலால் அடைக்கலம் புகுந்த கன் தம்பியை பாண்டும் இராமன் பாது காத்துக்கொள்ளுவான் என்று உறுதியாக நம்பி உள்ளம் உவங் திருந்தாலும் ஆற்ருமையால் மேலும் போற்றி வேண்டிஞன். 'இராமகாகா! நீ தருமமூர்த்தி; பாவிகளை அழித்து ஒழித்துப் பூமியைப் புனிதமாப் பரிபாலிக்கும் பொருட்டுப் பெரிய அரசர் குடியில் ஒரு மனிதனப் வந்து நீ அவதரித்திருக்கிருப். அந்த அவதார காரியங்களைச் செய்ய ஈண்டு மூண்டுவந்துள்ளாய்; உன்பால் வந்து என் தம்பி அடைக்கலம் புகுந்துள்ளான். பிறப் பில் அரக்கன் என்று பிழையாக அவனை நீ எண்ணிவிடலாகாது. சாதி வாசனை யாதும் அறியாதவன். சிறந்த நீதிமான்; உயர்ந்த கருமகுண சீலன், உங்களோடு வந்து சேர்ந்துகொண்டான்