பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4134 கம்பன் கலை நிலை தனக்கும் தன் குலத்துக்கும் ஒருங்கே காசத்தை விளைக்க வந்திருப்பவளை ஆசையால் அவாவி வந்தான் என அவனது நீச நிலைமையை இவ்வாறு விளக்கி யருளினர். சிறையில் இருப் பவளை நிறை காத்து நிற்கிறது; அங்கக் காப்பு நிலையை உணரா மல் காமப் பேயன் களிப்பு மீதுார்ந்து வந்தான். கண்களால் கண்டான். என்றது கருதி யுணர வந்தது. எண்களால் எப்பொழுதும் சீதையைத் தன் உள்ளக்கே கண்டு கொண்டிருப்பவன் ஆக லால் இப்பொழுது நேரே கண்களாலும் கான நேர்ந்தான் என்பதை ஈண்டு இங்ங்னம் காட்டியருளினர். பல மானச மருமங்களை நாம் கண்டு தெளியுமாறு கவி காட்டி வருவது கலை யின் சுவைகளை நீட்டி உணர்வு வகைகளை ஊட்டி வருகிறது. இனிய பெண்கள் நாயகத்தைக் கொடிய அரக்கன் கண்க ளால் கண் டான், அங்கக் காட்சியால் இவளுக்குக் கடுங் துயரங் கள் நேர்ந்தன, தீயவன் கண்பார்வையால் த பவளுக்குநேர்ந்த துயரத் துடிப்புகளை யெல்லாம் உய்த்தணர்ந்து கத்துவங்களைத் தெளிந்து கொள்ள உரைகள் உருவாகி வந்துள்ளன. சீதை இருந்த நிலை. அழகிய அசோக வனத்தில் இனிய ஒரு குளிர் தருவின் அடியில் அதிசய எழிலோடு மெலிந்து வாடித் துயரமே உருவ மாய்ச் சீதை மருவி யிருந்தாள். தனது அருமை நாயகனை எப் பொழுது காண்போம் என உழுவலன் பால் ஏங்கி உருகி மறுகி உயிர் பகைத்து எவ்வழியும் உய்தி நாடி நின்ருள். கொடிய அரக்கிகள் புடை சூழ்ந்து கடுமையாகப் பாதுகாத்திருக்காலும் இடையிடையே திரிசடை ஆறுதல் கூறி வந்தது அரிய உதவியா யிருந்தது. அனுமான் வந்து போனபின் உள்ளத்தில் உறுதியும் ஊக்கமும் பெருகி யிருக்கன, ஆயினும் குறித்த தவணை நெருங்க நெருங்க நெடுந் திகிலும் பெருகி வந்தது. இலங்காபுரி பல காவ தங்கள் அமைந்த நெடிய நகர ம் ஆசலால் இராமன் படைக ளோடு வந்து வட திசை வாயிலில் போர் மூண்டு நிற்கும் கிலை மையை இக் குலமகள் அறிந்து கொள்ள வில்லை. நகரின் தென் கோடியில் தனியே சிறையில் தங்கி யிருத்தலால் அங்கே