பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3974 கம்பன் கலை நிலை தொடுத்து விடுத்த கொடைகள் போல் பல்வகை அணிகளோடு யாண்டும் கடையின்றி ஊடுருவி ஒடின என்க. செய்யுள் கொண்ட தொடை ஒன்று பத்து நூறு ஆயிரம் என முறையே விரிந்து பெருகி விரைந்து வருதல்போல் இராக வன் வில்லில் கொண்ட தொடையும் எல்லையின்றி எழுந்துள் ளமையை ஈண்டு உள்ளி யுணர்ந்து கொள்ளுகிருேம். தொட்ை நிலை "மெய்பெறு மரபில் தொடைவகை தாமே ஐயீர் ஆயிரத்து ஆறைஞ் ஆாற்ருெடு தொண்டுதலை யிட்ட பத்துக்குறை எழு நூற்று ஒன்பஃது என்ப உணர்ந்திசி னேரே, தெரிந்தனர் விரிப்பின் வரபில பல்கும்.' (தொல்காப்பியம்) பதின் மூவாயிரத்து எழுதுாற்றுப் பத்துத் தொடை வகை கள் உள்ளன; மேலும் விரித்தால் வரம்பின்றி அவை வளர்ந்து செல்லும் என ஆசிரியர் தொல்காப்பியனர் செய்யுளின் தொடை களைக் குறித்து இவ்வாறு உரைத்திருக்கிரு.ர். இலக்கணக் குறிப் புகள் இலக்கியச் சிறப்புகளை உணர்த்தி நிற்கின்றன. (கவிஞரது கவி நிலைகளைக் காவிய நாயகனுடைய கணக ளுக்கு உவமை கூறி நம் கவிஞர்பிரான் இங்கே உரைத்திருப்பது கவிச் சுவையிலும் கலைப் பண்பிலும் கவிஞர்பாலும் இவருக் குள்ள உவகை உணர்ச்சிகளை விளக்கியுள்ளது.' -இ. ாவணனது உருவில் உறைந்திருந்து கொண்டு இராம பிரானுடைய அற்புத மகிமைகளை உழுவலன்போடு விழுமிய நிலைகளில் உரைத்திருக்கிரு.ர். உரைகளில் அரிய பல பண்பாடு கள் பெருகி வந்துள்ளன. உள்ளத்தில் மருவியுள்ள உணர்ச்சி கள் எவ்வழியும் ஒளி செய்து மிளிர்கின்றன. “His page is the lucid mirror of his mind and life” (Newman)

கவிஞன் நூல் அவனது இதயத்தையும் சீவியத்தையும் தெளிவாகக் காட்டும் இனிய கண்ணுடி' என கியுமன் என்னும் ஆங்கில ஆசிரியர் கூறியுள்ளது ஈங்கு அறிய வுரியது.

தமது கதா நாயகனே அற்புத மூர்த்தி, அதிசய வெற்றியா ளன் என எதிரியின் வாய்மொழிகளால் கவி பல வகையிலும்