பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4且46 கம்பன் கலை நிலை னும் நல்லகே; வின நசையால் மானம் கெட்டு ஈனமாப் உ ழந்து உழலுகின்றேனே! என அனுதாபம் உறும்படி பரிதாபமாய்ப் பரிந்து கூறினன். மையல் மோகம் மரண வேதனையாய் நின்றது. பேர் எழில் மானம் கொல்ல என்ற தல்ை சீதையின் உருவ அழகில் உள்ளம் பறிபோப் எள்ளலடைந்து அல்லலுழந்து அல மந்து வருகலை நன்கு அறியலாகும். எழில் கொல்ல, மானம் கொல்ல எனக் கனித்தனி கூட்டி நோக்கி அவன் கொலையுண்டு வரும் நிலையைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். கொல்ல என்னும் சொல்லால் கொலை வேதனைகள் எல்லாம் நேரே அறிய வந்தன. பரிதாப நிலையில் பதை பதைத்து உழல்கின்ருன். -என்சீனப் பிறந்திலன் ஆக்க வந்தீர்! இராவணனுடைய வாயிலிருந்து இப்படி வார்க்கை வந்தி ருக்கிறது. உயிர் வேதனைகள் உரைகளில் வெளியாயின. சிறந்த அரசய்ைப் பிறந்து உயர்ந்த செல்வங்களோடு ஒளி பெற்றுள்ளவன் இவ்வாறு உள்ளம் உடைந்து உரைத்திருப்பது அவனுடைய நிலைமைகளைத் தெளிவாக உணர்த்தி யுள்ளது. தனது பிறவிக்குப் பயன் சீதையை உரிமையாகப் பெற்று மகிழ் வதே என அவன் முடிவு செய்திருக்கிருன். அங்க இனிய பேறு கிடையாவிடின் கன் பிறப்பு பயன் அற்றது; பாழ்பட்டது; தான் பிறந்தும் பிறவாதவனே எனத் தன்னுடைய தோற்றத் தை இங்ங்னம் எள்ளி இகழ்ந்து இனங்து மொழிந்தான். இராவணன் பிறந்து அரிய பல செல்வங்களை அடைந்து தேவரினும் சிறந்து உயர்ந்து இருந்தான்; அந்த இருப்பெல்லாம் நெருப்பில் விழுங்க பஞ்சுப் பொதிகள் போல் நிலைகுலைந்து போயின; அந்தப் போக்கும் புலேயும் தெரிய என்னை இலன் ஆக்க வந்தீர்! எனச் சீகையை நோக்கி இந்த வாக்கு வந்தது.) அழிவு நிலையைக் கானகவே போப் வலிந்து கவர்ந்து வந்து பழி நிலையைச் சீதையின் மேல் சுமத்தி இழுதையாய்ப் பிதற்று கின்றன். அவள் வரவு இவன் அழிவுக்கு மூலகாரனமாய் சேர்க்கது. அவ் வுண்மை ஈண்டு உலகம் அறிய வந்தது. தன்னலம் கருதி இன்னவாறு பலவும் பேசி வந்தவன் முடிவில் காரியசித்தியைக் கைகூடும்படி கூரிய நோக்கோடு