பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4 155 பலமுறையும் வந்து கன்பாழ்வாய் திறந்து பழிமொழிகளைப் பேசும் அழிமதியாளன் விழிதிறந்து தெளியும்படி தனது வாழ் வையும் சூழ்வையும் வரைந்து காட்டினள். “எனது பிராணநாய கஜனப் பிரிந்த போதே நான் இறந்து போயிருப்பேன்; அவ்வாறு இறவாமல் இவ்வாறு இருந்துவாழ்வதற்கு உரிய காரணத்தை நீ உணர்ந்து கொள்ளவேண்டும்” என நேரே உணர்த்தியருளினுள். புண்ணிய மூர்த்தி தன்னேக் காணலாம் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய்! தன் இருப்பின் குறிக்கோளை இங்ங்னம் உணர்த்தினுள். அறிவு கெட்டு நாணம் இன்றி மானம் குன்றி நான் வாழ வில்லை. எனது உயிர்வாழ்வு இன்னவகையில் இந்த உடம்பில் 'மன்னியுள்ளது என அவன் உன்னி யுணர வுரைத்தாள். S. இராமனே இங்கே புண்ணியமூர்த்தி என்றது இராவணனைப் பாவப் பழியன் என்று குறித்தபடியாம். கருமமே வடிவமான அந்தப் புனிதமூர்த்தியைக் கண்டு மகிழலாம் என்னும் ஆசையி ஞலேயே நான் உயிர் வாழ்ந்து வருகிறேன். என்னிடம் சே மான வார்த்தைகளைப் பேசி நாசமடையாதே என அவன் காவ டங்கப் பேசினுள். உரைகள் உள்ளத்தின் உறுதி நிலையை உணர் - த்தி உயர்ந்தபெண்மையின் உண்மைநீர்மையை விளக்கிநின்றன." - ' கவை அறுகுனங்கள் என்னும் பூண்எலாம் பொறுத்தமேனி. என்றது அகிலமங்களகுணகன சொரூபி என அவனது திவ்விய நீர்மைகள் தெரியவந்தது. குணங்களையும் புண்ணியத் தையும் வரைந்து கூறியது இராவணனது குற்றங்களையும் பாவத் தையும் விரைந்து காட்டியபடியாம். மாணிக்கம் வயிரம் முதலிய நவமணிகளால் அமைந்த உயர்ந்த அணிகளே உடல்முழுதும் அணிந்து அரசகோலமாய் ஆடம்பரத்துடன் வந்துள்ளான் ஆத லால் அந்தப் பூண்களின் புலைநிலைகளை இகழ்ந்து தன் தலைவனைப் புகழ்ந்து பேசினள். இழிந்த அவன்தெளிந்து விலக மொழிந்தாள். (துறவியாப் வனவாசம் செய்ய வந்திருத்தலால் இராமன் யாதொரு அணியும் திருமேனியில் அணியவில்லை: அப்படியிருக் அதும் அரிய பல அணிகள் அவன் அணிந்திருப்பதாகச் சீதை புனை க்து புகழ்ந்து இங்கே உவத்து கூறியது வியந்து சிக்திக்க வந்தது.