பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 41.87 "திருமுயங்கல் இல்லை எனின் இல்லை பொருள் சட்டம்." (சிவகசிந்தாமணி,2556) இதில் திரு உணர்த்தி நிற்றலை ஊன்றி உணர்க. (செல்வம் ஒரு நிலையில் நில்லாமல் யாரிடமும் பரவிப் பூரியா ரிடமும் போய்ச் சேர்ந்திருத்தலால் அதன் தெய்வமான செல்வி' யைத் தனக்கு ஒல்லும் வகையில் அந்த மாயவல்லவன் வனேந்து சொல்லினன். பொதுமை யுற்ற்ள் என்றது பொதுமகள் என் லும் தொனியில் வந்தது. தனது தேகபோகத்தை ஏகபோக மாப் ஒருவனுக்கு மாத்திரம் நல்காமல் பலர்க்கும் பொதுவாப் இசைங்து கொடுப்பவள் பொது மகள், வரைவில்மகள், என கின்ருள். அந்த வேசித்தனத்தை இங்கே கூசாமல் அவன் துணிந்து பேசியது தனது காரியசாதனையைக் கருதி என்க.". _ 'திருவுடை மன்னரைக் காணின் திருமாலேக் கண்டேனே என்னும்' (திருவாய்மொழி) என்றபடி அரசர்கள் திருமாலின் அமிசமாய் மருவியுள்ள னர். அவர்களிடமெல்லாம் செல்வத்திரு பரவியுளது. ஆகவே பூமகள் பொதுமகள் என்னும்படி மன்னியுள்ளாள் என அவன் நன்னயமாய் நவிற்றியுள்ளான். பெற்றமகளிடம் உற்றதந்தை உரிமையோடு பேசுவது போல் உரையாடி வருபவன் திருமகள் நிலைமையை மருமமாக் காட்டிக் கருமம் காண முயன்ருன். திருமகள் கிலேமையும் செல்வர் கேட்டிரேல் மருவிய மனிதரை இகந்து மற்றவள் பொருவறு புகழினர்ப் புதிது காமுறும் ஒருவர்கண் உறவிலள் உணர்ந்து கொண்மினே. (1) புண்ணியம் உலர்ந்தபின் பொருள் இலார்களேக் கண்ணிலர் துறந்திடும் கணிகை மார்கள் போல் எண்ணிலள் இகந்திடும் யாவர் தம்மையும் நண்ணிய கண்பிலள் கங்கை வண்ணமே. (3) (சூளாமணி,முத்திச்சருக்கம்,14,15) கணிகைமார் போல் திருமகள் பலரையும் மருவி ஒருவரிட மும் உறவிலளாய் ஒருவி நீங்குவள் என ஒர் அரசன் இங்கனம் உரைத்திருக்கிருன். செல்வத்தின் நிலைமையைத் திருமகள் மேல்