பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4193 அறம்கெட, வழக்கு நீங்க என்றது அவன் கூறிய வார்த்தைகள் பாவப் பழிகளாய்ப் பணைத்துள்ளமையை உணர்த்தி கின்றது. ாத்ன்னுடைய தங்தை என்று முழுதும் நம்பி அழுது கவித்தாள், ! Tமொழிகளைக் கேட்டதும் யாரோ ஒரு வெய்யவன் மாயமாப் வந்துள்ளான் என்று ஐயம் அடைந்தாள்.ஆதலால் சனகன்கொல்? என அதிசய ஆவலோடு வினவலானள். - i. இனைய சொன்னுய் என்றது இப்படி ஈனமான இழி: மொழிகளை ஞான சனகன் பேசுவான? ஏதோ இதில் மோசம் உள்ளது! என்று மோதியபடியாம். ஒருவனுடைய வாயிலிருந்து வெளியே வருகிற வார்த்தை அவனது நிலைமையைத் தெளிவாக அறிந்து கொள்ளச் செய்யும் ஆதலால் மறைந்து வந்துள்ளவன் இழிந்த தீயவன் என உணர நேர்ந்தது. உரையே உரைகல் என்றபடி அவனை நிறை தாக்கி நோக்க வாய்மொழி வாய்ப்பாப் வக்கது. தெய்வத் தையலான இலட்சுமிகூடஎல்லாருக்கும் பொது வாயிசைந்திருக்கிருளே! என்.று அவன் சாதுரியசாகசமாய்க் கூறிய புலைமொழி இக்குலமகள் உள்ளத்தில் கொடிய கோபக் கொதிப்பை மூட்டி விட்டது; மூட்டவே தங்தை என்று கருதி நொந்த சிங்தை முழுதும் மாறிச் சீறிச்சினந்து நேரே பேசநேர்க் தாள். பெண்ணரசி சீற்றம் எண்ணரிய வேகமாய் எழுந்தது. 'பிடிபட்டு அடிபட்டு அயர்ந்து வந்திருக்கிறேன்; என் உயிர் போய்விடும்; நீ விரைந்து இலங்கை வேந்தனுக்கு இசைக்க ருள்” என்று பசைக்து பணிந்து அவன் வேண்டினன் ஆதலால் அகற்கு இசைக்தபடி இக் குலமகள் எதிர் மொழிந்தாள். நீயும் கின் கிளையும் இவ்வுலகும் நேரே மாயினும் நான்முறை குன்றி வாழ்வனே? என்னும் இந்த வார்த்தை எவ்வளவு ם-ן הםB வேகமாய்விறிட்டு வெளிவந்துளது! தனது உள்ளத்திண்மையை யும் உறுதி ஒழுக்கத்தையும் இப்பெண்ணரசி பேருலகம் காண ஈண்டு உணர்த்தியிருக்கிருள். சனகமன்னன் என வேடம் தரித்த வனுக்கு ஞான சீலங்களும் மானவிரங்களும் காடகமுறையிலா வது உளவாம்; இந்த ஈனனிடம் அந்த மேன்மையான நீர்மை கள் பாதும் காணவில்லையே! என்று கருதி உளைந்துள்ளாள். வழி கெடவரினும், மார்பம் கிழிபட அயில்வேல் வந்து கிழிப் பினும் அாசர் பழிபட வாழார் என்றது. சுத்தவீரமுடைய சத்திரிய 525