பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4, 192 கம்பன் கலை நிலை ஒரு சிங்கப்பேடு எங்கேயாவது ஈன நரியோடு வாழ நேருமா? மானம் மரியாதை யாதுமில்லாமல் ஈனமான வார்த்தைகளை இழிந்து கூறினயே! ஞான சேனை சனகன?ே மானவி முடைய மரபில் பிறந்த மன்னர் பிரானுக்கு இன்னுயிர்த் துணைவி என்ப தையும் மறந்து ஈனப் பழிமொழிகளை எதிரே விளம்பினயே! விதேக நாட்டில் பிறந்த எந்தக் காழ்ந்த சாதியும் இழிக்க காரிய ங்களை யாதும் செய்யாது; யாண்டும் நெறிமுறைகளைப் பேணி யே மரியாதைகளோடு வாழ்ந்து வரும்; அத்தகைய உத்தம தேசக்தின் அதிபதியா இப்படி மதிகேடனப் மானபழிந்து ஈன நிலையில் இழிய நேர்ந்தான்? உண்மையில் நீ என் கந்தையாகவே இருந்தாலும் சரியே, இராமபிரானுக்கு என்னேத் தனி உரிமை யாக நீ தத்தம் செய்து கொடுத்து விட்டாய்! அதன் பின்பு என் பால் நீ உறவு பாராட்டுவது அறிவினமேயாம்; கொடிய அரக்கர் கையில் பிடிபட்டவுடனே நீ செத்திருக்க வேண்டும்; அவ்வாறு அங்கே சாகாமல் இவ்வாறு இங்கே வந்து நீ பேசியது நீசமான பழியே; எனது பிராணநாயகன் வந்து என்னே மீட்டியருளினல் நான் மீண்டு போய் அயோக்தியில் இருந்து வாழுவேன்; மீட்ட வில்லையானுல் இங்கேயே விரைக்க மாண்டுபோவேன்; என் விரவள்ளல் கையில் உள்ள அந்த வீர கோதண்டத்தையே கண் னும் கருத்தும் கருதி உருகி வருகின்றன; பெண்ணுலகத்துக் கெல்லாம் பெரும் பிழையாய் நான் மறுகியிருக்கின்றேன்; இந்த மறுக்கத்தில் நீ குறுக்கே வந்து இழிமொழிகளைப் பேசி என் அறும் அழியாத பழிகளை உனக்கு நீ விளைத்தக் கொண்டாப், விளிந்து போ! அல்லது விலகிப் போப்விடு!’ என்று இக்குல மகள் இவ்வாறு தலைமையான விருேடு கூறி முடித்தாள். இந்தப் பேச்சுகள் அரிய பல காட்சிகளைக் காட்டியிருக்கின் மன; அபாய நிலையில் அயர்ந்து மயங்கினவள் அடுத்து அவனு டைய வாய்மொழிகளைக் கேட்டதும் உள்ளம் கடுத்து உக்கிர விரமாப் உருத்துப் பேசியிருக்கிருள். எந்தையே! எந்தையே! என்பொருட்டு உனக்கும் இக்கோள்வந்ததே என்று சிங்தை துடி த்துப் பதைத்தவள் பின்பு இந்தவாறு பேசியது அந்த உள்ளத் தின் பரிசுக்க நிலைகளையும் உணர்ச்சி வேகங்களையும் விளக்கி கிற்கிறது. தரும நீதிகள் உரைகளில் ஒளி வீசுகின்றன. ,