பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 42ll அல்லல் புரிக்க போது அயல் ஒதுங்கி நின்ற திரிசடை பின்பு மெல்ல நெருங்கிச் சீதை அருகே அமர்ந்து ஆகா வி! கூறினுள். அன்பு நலங்கனிக்க அவளுடைய வாய்மொழிகள் இக்குலமகளு க்குப் பெரிய ஆறுதலாப்ப் பேரின்பம் விளேத்தது. நேர்ந்த வஞ்ச நிலைகள் எல்லாம் செஞ்சம் தெளியவே உற்றிருந்த கவலைகள் யாவும் ஒருங்கே நீங்கி உள்ளத்தில் உவகை மீதுளர்ந்திருந்தாள். வரிசடை நறுமலர் வண்டு பாடிலாத் துரிசடை புரிகுழல் சம்மை சுற்றிய ஒரு சடை யுடைய வட்கு உடைய அன்பிள்ை திரிசடை தெருட்டுவாள் இனேய செப்புவாள்: (1) உங்தைஎன்று உனக்கெதிர் உருவம் மாற்றியே வந்தவன் மருத்தன் என்று உளனேர் மாயையான் அந்தமில் கொடுந்தொழில் அரக்கன் ஆமெனச் சிந்தையில் உணர்த்தினள் அமுதின் செய்கையாள். (2) நங்கையும் அவளுரை நாளும் தேறுவாள் சங்கையும் இன்னலும் துயரும் தள்ளிள்ை; இங்குகின்று ஏகிய இலங்கை காவலன் - அங்குகின்று இயற்றியது அறைகுவாமரோ. [3] திரிசடை கேற்றியுள்ளவகையையும், சீதை தேறி உவந்திரு க்கும் விலையையும் இவை தெளிவாக உணர்த்தியுள்ளன. பரி தாபமாய் மறுகி யிருக்கவளுக்கு உரிமையோடு உண்மையை உரைத்து அருகே அமர்ந்து ஆதரவாப் உவகை யூட்டியுள்ளாள். 'அம்மா சீகா! நீ யாதும் கவலாதே; உனக்கு ஒரு துேம் வராது; இப்பொழுது இங்கே உன் கங்கையைப் போல் வந்தவன் மருத்தன் என்னும் ஒர் அரக்கன்; மாயைகள் பலவும் வல்லவன்; அவனே வஞ்சச் சூழ்ச்சியுடன் கொண்டு வந்து உன் நெஞ்சைப் பேதிக்க மன்னவன் கெடிது முயன்ருன்; முடிவு வேரு யது; உன்னைத் துன்புறுத்தினவன் துயருழந்து போனன்; உன் நாய கன் படைகளோடு வக்க இலங்கையை முற்றுகை செய்து வட திசைவாயிலில் போர் புரிந்து நிற்கின்ருன், ஒல்லையில் நீ நல்லது காண்பாப், உள்ளம் வருங்காமல் இரு அம்மா; என்று அன்பு நலம் கனிய அறிவோடு திரிசடை ஆதரவு கூறியருளினுள்.