பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

421.2 கம்பன் கலை நிலை அமுதின் செய்கையாள் எனக் கவி இங்கே அவளை அழ காகக் குறித்துள்ளார். துயரங்களை நீக்கி உறுதி நலங்களை உதவிச் சீதைக்கு உவகை புரிந்து வருபவள் ஆதலால் அமுதம் என சேர்ந்தாள். குணம் செயல்களில் இனியவள்; தந்தை யாகிய விபீடணனைப் போலவே கரும நீதிகளையுடையவள், இராமனு க்கு அவன் அங்கே உழுவலன்போடு உடனிருந்து உறுதி புரிந்து வருதல் போல் சானகிக்கு இவள் இங்கே எவ்வழியும் இனியளாப் அருகு அமர்ந்து ஆதரவு செய்து வருகிருள். ஒரு சடை உடையவள். சீதையை ஈண்டு இவ்வாறு காட்டியிருக்கிரு.ர். நாயகனைப் பிரிந்து பரிதாப நிலையில் மறுகியுள்ளாள்; ரோடலின்றித் தைலம் முதலியன இழந்து புழுதிபடிந்து அந்த நெடிய கூந்தல் ஒரே சடையாய்த் திரண்டு இருக்கலால் அந்நிலை கெரிய வுரைத்தார். உரிய கணவனுடைய பிரிவின் துயரம் உயி ரை வாட்டியுள்ளது; அவ்வுண்மையை மயிர் காட்டி நின்றது. நீண்டு செறிந்து நெரிந்து பரந்து விரிந்திருந்த கரிய பெரிய கூந்தல் அழுக்குப் படிந்து நெடிய சடையாயப் மடிந்து கிடந்தது ஆதலால் துரிசு அடைபுரிகுழற்சும்மை என அதன் நிலைமை தலை மைகளைப் புலமை நலம் பொலிய நேரே தெரிய வுரைத்தார். 'குமையுறத்திரண்டு ஒருசடை ஆகிய குழலாள்.' என முன்னம்’ குறித்திருப்பதும் ஈண்டு இணைத்து எண் ணத்தக்கது. அரிய விரத ஒழுக்கங்களுடைய பெரிய தவசிபோல் இப்பதிவிரதை மருவி யிருக்கலைச் சடைமுடி ஒர்ந்து கொள்ளச் செய்தது. கிலேமையும் நீர்மையும் நெஞ்சை யுருக்கியுள்ளன. ஒரு சடை யுடையவளுக்குக் கிரிசடை ஆகாவு கூறியது உரிமை கோய்ந்து வந்தது. பல முறையும் அவளுடைய வாய் மொழிகள் உண்மையை உணர்த்தி உறுதி புரிக்க வந்துள்ளமை யால் இதனைப் பெரிதும் நம்பிப் பெருமகிழ்ச்சி யடைந்தாள். சங்கையும் இன்னலும் துயரும் தள்ளிள்ை. வங்கவன் தன் கங்தை கானே? என்று சிங்கையில் கொண்ட சந்தேகமும், கிகி லும், கலக்கமும் அடியோடு நீங்கிச் சீதை அமைதியுற்றிருந்தமையை இதல்ை அறிந்து கொள்ளுகிருேம்.

  • இந் நூல் பக்கம் 2949, வரி 16 ெ