பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

н" 4214 கம்பன் கலை நிலை இராவணனுடைய உள்ளம் இப்பொழுது உள்ள நிலையை இதனுல் உணர்ந்து கொள்கிருேம். இராமனது அதிசய ஆற்றல் இலங்கை வேங்கனுக்குப் பெருக்திகிலையும் பெரிய அல்லலையும் விளைத்துள்ளது; அவ்வுண்மையை இங்கே அவன் பேசியுள்ள வாசகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. போர் என்று போளுல் எவரையும் கொன்று வென்று வருவதே அவனுடைய சேனேக ளின் இயல்பாப் இருந்து வந்த்து. அந்த நிலைமாறி அச்சமும் அவலமும் இப்பொழுது ζα வரிடமும் பெருகி நிற்கின்றன. அமரிடை ஏறத் சமரிடையேயும் தளர்வு தோன்றி யிருத்தலால் அத் தளர்ச்சி நீங்கிக் கிளர்ச்சி ஒங்க வளர்ச்சியோடுபேசினன். o அதிகாயன் எழுந்தது. . இவன் இராவணனுடைய புகல்வன். தானியமாலை வயிற்றில் பிறந்தவன். இந்திர சித்துக்கு இளையவன். அருந்திறலாண்மை யும் பெரும் போர் விர மும் ஒருங்கே வாய்ந்தவன். பாண்டும் எதற்கும் அஞ்சாத நெஞ்சினன். அதிசய பர ாக்கிரமங்களை யுடைய இவன் கங்கை கூறிய வார்க்கைகளைக்கேட்டதும் சிந்தை நொந்து சினந்து எழுந்தான். மானவிரங்களோடு மனம் துனிங் து தாதையை நோக்கி நேரே பேசினன். இவனுடைய வாய் மொழிகள் அதிசய கம்பீரங்களாய் ஆரவாரங்களோடு வெளி வந்துள்ளன. அயலே வருவன காண்க. கதிகாய்நெடு மானமும் நானும்உரு மதிகாய் குடை மன்னனே வை.துரையா விதிகாயினும் விரம் வெலற்கு அறியான் அதிகாயன் எனும்பெயரான் அறை வான். [1] வான் அஞ்சுக வையகம் அஞ்சுகமா லான் அஞ்சு முகத்தவன் அஞ்சுக மேல் நான் அஞ்சினன் என்று ஃ ைகாணுக போர் யான் அஞ்சினன் என்றும் இயம்புவதோ! (2) தங்தையை நோக்கி மைங்கன் பேசியுள்ள இவ்வுரைகளில் இவனுடைய மானக் சொதிப்பும் விர க்கடிப்பும் சேரத் துடித்து நிற்கின்றன. போருக்கு அஞ்சுகின்றவர் ஈண்டு ஒதங்கி நிற்க; அஞ்சாதவர் மூண்டு கேரே செல்க' என்று இராவணன் உரை