பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4235 எங்கும் வல்லமையோடு வெற்றிபெற்று வந்தவர் ஈண்டு வலியிழந்து முற்றும் அழிந்துபோயுள்ளனர். அந்த அழிவுக்குக் காரணம் அம்மரபுக்கு நேர்ந்துள்ள கொடிய பாவமேயாம். சிதை, மகாபதிவிரதை, அந்த உத்தம பத்தினியின் உள்ளம் - கொதிக்கும்படி இராவணன் செய்திருக்கிருன்; ஆகவே அந்தப் பாவத்தால் அவன் குலம் முழுவதும் எளிதே காசம் அடைய நேர்ந்துள்ளது. தீவினை விளைவால் சாவுகள் விளைந்தன. . . “For the wages of sin is death; but the gift of God is eternal life” (Bible)

பாவத்தின் கூலி மரணம்; தெய்வத்தின் கொடை கித்திய வேனயுள்ளது” என்னும் இது இங்கே உய்த்துணர வுரியது.

இராவணன் நெறிகேடனப்ப் பாவகாரியங்களைச் செய் துள்ளமையால் அவன் குலத்தோடு அழிய நேர்ந்தான். சீதை ஆகிய எமன் உள்ளே புகுந்திருத்தலால் வெளியே, கின்று ஒரு வில்லின் துணையால் இலக்குவன் எளிதே கொல்ல நேர்ந்தான். சிதை என்று ஒரு கொடும் கூற்றம் தேடினர். ஆற்றல் மிகுந்த அரக்கர் அவமே செத்து வீழ்தற்குரிய காரணத்தை இது உய்த்துணரச் செய்தது. கூற்றமும் குறுக அஞ்சிய அரக்கர் குலக்கை அடியோடு அழிக்கின்ருள் ஆதலால் சீதை கொடும் கூற்றம் என இங்கே கூற நின்ருள். தமக்கு நாசத்தைத் தாமே தேடிக்கொண்டார் என அரக் கரது சேத்தை இங்கே நினைவுறுத்தி யருளினர்:Lதீவினையாளர் . எவ்வளவு தேக பலங்களை எய்தியிருந்தாலும் அவை யாவும் பாழாய் அவர் அழிந்து போவார் என்பது தெளிந்துகொள்ள வந்தது. நல்லவர் வெல்கின்ருர்; அல்லவர் அழிகின்ருர், ! போரில் விழுகிற கொலைகளிலும்கூடத் தலைமையான கரும நீதிகளையும் உறுதியுண்மைகளையும் | ட து கவிஞர்பிரான் உணர்த் திவருவது உவகை சுரங்து வருகிறது. பத்தினிகளுக்கு இடர் செய்யலாகாது; செய்தால் அவன் குலம் நாசமாம்; இவ் வுண் மையை உலகம் நேரே காண இலங்கை வேந்தனைச் சான்று காட்டி இவ்வாசகம் இங்கு நன்கு தெளிவுறுத்தி புள்ளது.'