பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4257 பெண் எனும் பெயரவெல்லாம் பிளப்பன் என்று எண் ணும் எண்ணிப் நுண்ணிடை எரிபுக் கென்ன மானத்தால், புழுங்கி கையும். . (4) (அதிகாயன் வகைப்படலம்) - அதிகாயன் இறந்துபட்டான் என்பதைக் கேட்டதும் இராவணன் துயரத்தால் துடித்து உயிர் பதைத்திருக்கும் நிலை களை இவை உணர்த்தியுள்ளன: புத்திர சோகம் அவனைச் சித்திர வகை செய்திருக்கிறது. துக்கமும் வெட்கமும் மானமும் வெகு ஆரியும் அவன் உள்ளத்தில் அலைகளைப்போல் அடர்ந்துதொடர்ந்து படர்ந்து நிமிர்ந்திருக்கின்றன. பேப்ெ காண்டவனைப்போல் வெறிமண்டி விழித்து நோய் கொண்டு திகைத்திருக்கிருன். - திசையினை நோக்கும்; கின்ற தேவரை நோக்கும் என்றது. தனக்கு நேர்ந்த வசையினை நினைந்து மறுகி நொந்த பரிதாப கிலையை வெளிப்படுத்தி நின்றது. தேவர்கள் பகை வகையினர் ஆதலால் அவர் இகழ்ந்து சிரிப்பரே என்று உள்ளம் நாணி உளைந்து வருந்தியுள்ளான். சோகம் எல்லைமீறி எழுந்தாலும் சிறந்த போர்வீரன் ஆதலால் தனது ரிேய கூரிய வாளை விரிய விருேடு வெகுண்டுநோக்கினன். இந்த வெற்றிவாள் தன்கையில் இருந்தும் கோல்வியும் பழியும் தொடர்ந்து வர நேர்ந்தனவே! என்று.அவன் துடித்துழந்துள்ளான். வாளை வெறுத்து நோக்கிய நோக்கம் அங்க ஆளேக் குறித்து நோக்கச் செய்தது. மீசை சுறுக்கொள உயிர்க்கும். என்றகளுல் சோகத் தீயில் அவன் உள்ளமும் உயிரும் வெக் துள்ள வேகநிலையை உய்த்துணர்ந்து கொள்ளலாம். மூச்சுக் காற்று கொடிய வெப்பமாய் வெளிவந்துள்ளது. மீசையும் கரு கும்படி மூக்கிலிருந்து உயிர்ப்பு நீண்டு வந்திருத்தலால் உள்ளே துயரத்தி மூண்டு வெந்திருக்கும் கிலை தெரியவந்தது. ஒரு நிலை யில் கில்லாமல் பலவகையிலும் செயலிழந்து துயர் அடைந்து பதைத்து நொந்தான். உயிரின் துடிப்புகள் உடலில் கோன்றின. நகும்; அழும்; முனியும்; காணும். புத்திர சோகத்தால் இராவணன் பட்டிருக்கும் பதைப்பு களைக் கவி இங்வனம் சுருக்கமாச் சுட்டியிருக்கிருர். இந்த வித் தக விளக்கம் நன்கு உப்துணரத்தக்கது. அமரரையும் அடக்கி ஆளும் அதிசய அதிபதிக்கு இரண்டு மனிதராலும் சில குரங்கு o 633