பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,292 கம்பன் கலை நிலை கின்ருன். எடுப்பதும் கொடுப்பதும் விடுப்பதும் மடுப்பதும் கடுப்பதும் அடுப்பதும் விசித்திர வேலைகளாப் விரிக் து கின்றன. மந்திர முறைகளோடு கூடிய திவ்விய பானங்கள் ஆக லால் உயிருடையனபோல ஆகாய விதியில் இருவகை இனங்க ளும் போராடியிருக்கின்றன. ஒருவரை ஒருவர் வென்றுதொலைக் கக் கன்றிக் கறுத்துக் கடுத்து மூண்டு கொதித்து அமராடியுள் ளனர். ஒரு நிலையில் நில்லாமல் பலவகை நிலைகளிலும் சாரி திரிந்து மாறி மாறிச் சீறிப் போராடியிருக்கலால் இவருடைய சிலைக் கடுந்தொழில்கள் கலைப்பெருங்காட்சிகளாய்க் கலித்து நின்றன. அதிசய வேகம் அமரரையும் மதிமயங்கச் செய்தது. அரியினம் பூண்ட தேரும் அனுமனும் அனந்தசாரி புரிதலின் இலங்கை யூரும் திரிந்தது. இருவரும் சாரிதிரிந்து போராடியுள்ள நிலையை இது நேரே காட்டியுள்ளது. விர வெறியோடு கூடிய சிங்கஏஆறுகள் பூட்டிய கேர் ஆதலால் இந்திரசித்து ஏறியிருக்க தம் அரியினம் பூண்ட தேர் என நீண்ட பேரை எ ப்தி நின்றது. அந்த உக்கிர விர த் தேரோடு அனுமான் எ ப் பக்கமும் நேரே சாரி திரிந்து போராடி யிருக்கிருன். அந்தச் சிங்க ஏறுகளும் அஞ்சி அயரும்படி இந்த அஞ்சனைச் சிங்கம் அடலாண்மை மண்டிக் கதிவேகம் காட்டி அடுதொழிலாற்றி நெடி.து சுற்றி நேர்ந்து பேர்க் து நெடுங் திகில் மூட்டியுள்ளது கூர்ந்து நோக்கி ஒர்ந்து கொள்ளத்தக்கது. இலக்குவன் ஏறியுள்ள வாகனத்தின் கதிவேகங்களையும் அதிசய ஆற்றலையும் நோக்கி இந்திர சித்தும் மதிமயங்கி நின் முன். மேலுள்ள வில்லாளியின் ஆற்றலுக்கு ஆதாரமாய் கின்று ஏற்றம் புரிந்து வருகிற இவனே முதலில் அழித்து ஒழித்துவிட வேண்டும் என்று அவன் கவனமாகக் கடுங்கணைகளை அடுத் தடுத்துக் கொடுத்தான். கொடுத்த பகழிகள் யாதும் அனுமனை அனுகாதபடி இளையவன் கடுத்துத் துடைத்து வந்தான். இருவரும் பொருவரு நிலையில் போராடலாயினர். இவரு டைய அதிசய அமராடலை நோக்கி அமரரும் யாதும் தோன்ரு மல் பெருவியப்படைந்து ஒருவரை ஒருவர் நோக்கி வியன் மொழிகள் ஆடினர். எ வர் உயர்ந்தார்? எவர் தாழ்ந்தார்? யார் வெல்வார்? யார் தோற்பார்? என்று யாதொரு முடிவும் யாரும் கூற முடியாமல் மாறிமாறி வியந்து மறுகி கின்றனர்.