பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'7. இரா ம ன் 4295 நிற்றலை உய்த்துணர்ந்து கொள்கிருேம். விழியின் கனி சிவந்த நிறம் உடையது ஆதலால் உதிரம் கோப்ங்க புண்களுக்கு اتنگ (قے இங்கு உவமையாய் வந்து நிலைமையை விளக்கி நின்றது. இந்திரசித்து கை முக்திவிட்டது; இலக்குவனே வென்று விடுவான் போலும் என்று அமரர் யாவரும் அலமந்துள்ளனர். அவ்வுண்மையை முற்கொண்டான் அரக்கன் என அவர் உட் கொண்டு உளைந்து உருகி மறுகியுள்ளமை உணர்த்தி நின்றது. விற்கொண்டான் இவனே என்ன வெருக்கொண்டார். வில்விரர்களுள் இவன் ஒருவனே கலைசிறந்த நிலையினன் என்று பலரும் அன்று இந்திர சிக்கைப் பாராட்டியிருத்தலை இது நேரே காட்டியுளது. மானக் கொதிப்போடு அவன் கடுத்துத் கொடுத்த பகழிகள் வெற்றி நிலையில் விறு கொண்டு செல்லவே யாவரும் வெருவ நேர்ந்தனர். அனுமான் உடல் உதிர வெள்ளத் தில் தோய்ந்து கிற்றலைக் கண்டதும் இளையவன் உள்ளம் துடித் தது; உக்கிர வேகமாய் உருத்து அம்புகளைக் கொடுத்தான். கனக்கு வெற்றி கிடைத்துவிடும் என்று விறுகொண்டு நின்ற இந்திரசித்தின் தேர் உடைந்தது; பூட்டியிருந்த சிங்கங்கள் பொன்றி மடிந்தன; சாரதி கரையில் உருண்டான்; தன் மார்பில் வனந்திருந்த வச்சிர கவசமும் சிதைந்தது; தோளிலும் மார்பி அம் வாளிகள் ஊடுருவிப் போயின. எதிர்பாராதபடி அதிசய வேகத்தில் நிகழ்ந்த இந்த அழிவு நிலைகளைக் கண்டு இந்திர சித்து விழியூன்றி நோக்கி வெதும்பி யுளைந்தான். தனக்கு நேர்ந்த அல் லல்களையும் மறந்து எதிரியின் வில்லாடலை கினைந்துவியந்துகொண் டான். அவனது வியப்பு இவனது அம்புக ஆற்றலை விளக்கியது. பொன்னு று தடந்தேர் பூண்ட மடங்கல்மாப் புரண்ட போதும் மின்னுறு பதாகை யோடு சாரதி வீழ்ந்த போதும் தன்னிறத் துருவ வாளி தடுப்பில சார்ந்த போதும் இன்னது என்று அறியான் அன்ன்ை இனேயதோர் மாற்றம் சொன்ன்ை (1) அந்நரன் அல்லன் ஆகில் காரணன் அனேயன் அன்றேல் பின் அரன் பிரமன் என்பார்ப் பேசுக பிறந்து வாழும் மன்னர் தம் பதியின் வந்து வரிசிலே பிடித்த கல்வி இங்கரன் தன்ளுேடு ஒப்பார் யாருளர்? ஒருவன் என்ருன். (2)