பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3992 கம்பன் கலை நிலை உறக்க நிலையைக் குறித்து வி ள க் கி உரைத்தார். அவன் வெகுண்டு நோக்கி எப்படியும் அடித்து எழுப்பி விரைந்து கொண்டு வாருங்கள் என்று சிறந்த வீரர்கள் பலரை ஒருங்கே சேர்த்து அனுப்பினன். அச்சமும் அவலமும் மண்டி யாவரும் விரைந்து போப் ஆனவரையும் வருக்தி முயன்றனர். தென் திசைக் கிழவன் துரதர் தேடினர் திரிவர். எனக் கும்பகருணனே எழுப்பச் சென்றவரைக் குறித்து இங்கனம் உரைத்திருக்கிருர். எமது தர்கள் போல் போனர் என்ற கல்ை கும்பகருணன் இறந்துபட சேர்ந்துள்ளமையைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம்.T உறங்குகின்ற அந்த விரனை அகியாயமாய் விரைந்து கொல்லவே பொல்லாத இலங்கை வேக் தன் ஒல்லையில் சேனவிரர்களை ஊக்கி ஏவினன். அவனது ஏவல் தம்பியின் சாவினைத் தலைமேல் கொண்டு சென்றுள்ளது. சென் றவர் சேர்ந்து எல்லா வழிகளிலும் ஆய்ந்து எழுப்பியும் எழாமை கண்டு உள்ளம் கனன்று இருப்புலக்கைகளைக் கொண்டு இரு புறங்களினும் கின்று மாறி மாறி அறைந்து எழுப்பினர். உறங்கு கின்ற கும்ப கன்ன உங்கள் மாய வாழ்வெலாம் இறங்கு கின்றது இன்றுகாண் எழுந்திராய்! எழுந்திராய்! கறங்கு போல விற்பிடித்த கால அாதர் கையிலே உறங்குவாய்! உறங்குவாய்! இனிக்கிடந்து உறங்குவாய்! என்றும் ஈறிலா அரக்கர் இன்பமாய வாழ்வெலாம் சென்று தீய நூம்முனேன் தெரிந்து தீமை தேடினன் இன்ஆறு இறத்தல் திண்ணமாக இன்னும் உன்னுறக்கமே அன்ற லேத்த செங்கையால் அலேத்து அலைத்து உணர்த்தினர். கிங்கரர்கள் போய்க் கும்பகருணனே எழுப்பியிருக்கும் திறங் களே இவை உணர்த்தியுள்ளன. எழுப்பப் போனவர்களுடைய உள்ளங்கள் கொதித்துள்ளமையை உரைகள் உணர்த்தியுள் ளன. இரு வரிசைகளாய் கின்று அடிக்கும் அடிகளுக்கு இசைய வார்த்தைகள் த டி க் அ வந்திருக்கின்றன. சந்தம் படிந்து படித்து கோக்கின் அந்த விங்தையை அறிந்து கொள்ளலாம். நிகழ்ச்சி கிலைகளே ஒசை ஒலிகளால் உணர்த்தி வரும் விசித் திரம் வியந்து சிந்திக்கத் தக்கது. அரசன் ஏவலின்படி காவலர் சென் அறு கைசெய்து முயன்ருலும் அவருடைய மனவுறுதிகள் தளர்ந்து சினம் மிகுந்து சீறி இகழ்ந்து பேசியிருக்கின்றனர்,