பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,956 கம்பன் கலை நிலை வண்ணம் என்று காணநேர்ந்தது. பசியகோலத் திருமேனியகுப் மருவி கின்ருலும் பூர்வகிலேயின் பூவை நிறம் புனைந்து கூறவந்தது. 'பூவைபோல் கிற த்தினற்குப் புறத்தொழில் புரிந்த." (இராமா, வேள்வி, 3) அஸ்திர தேவதைகள் இராமனுக்கு ஏவல் செய்து நின்ற கிலையை இது குறித்துள்ளது. பூவை நிறம் இதில் மேவி வந்துள் ளமையை ஆவலோடு அறிந்து அழகு கிலையைத் தெரிகின்ருேம். தெய்வாஸ்திரங்களும் அவற்றின் அதி தேவதைகளும் இவ் விரன் கருதிய படியெல்லாம் உறுதியாய் ஊழியம் புரிந்து வருக லால் வெற்றி விருதுகள் யாண்டும் நீண்டு விளைந்து வந்தன. இக் கோமகனுடைய பானங்கள் உக்கிர வீரமாப் ஒடிப் பாய்ந்து எங்கும் அரக்கர் குலத்தைக் கொன்று குவிக்க கொலை நிலையை நேரே கண்டு கின்ற கேவ கணங்கள் நெஞ்சம் கலங்கி நெடுங் திகில் கொண்டு கைகால்கள் நடுங்கிச் செய்வகை தெரியாமல் தியங்கி மயங்கி உயங்கி எங்கும் ஒட நேர்ந்தனர். அமரர் கைகள் என அவுணர் கால்கள் குலைய. இராமனது போராடலைக் கண்டபோது கேவர்களும் அசு ரர்களும் அஞ்சி அலமந்து அயலே பட்ட பாடுகளை இவை காட்டியுள்ளன. இம்மான வீரன் அரக்கர் குலக்கை அழித்து வரும் அடலாண்மையைப் பார்க்க பொழுது வானவர்களுடைய கைகளும் மெய்களும் கடுக நடுங்கின, கானவர்களுடைய கால் கள் போன வழிதெரியாமல் புலனழிக் து ஓடின. அமரரது நடுக் கமும், அசுரர து ஒட்டமும் அரக்கருடைய அழிவு நிலைகளைத் தெளிவாக விளக்கின. யாவரும் வெருவ அடலமர் மருவியது. பண்டு சரசிங்கம் கொன்று தொலைத்த இரணியனைப் போன்ற பல்லாயிரம் கோடி இராக்ககர்களைக் கோசலைச் சிங் கம் அன்று வேகமாய் அழித்து ஒழித்தது ஆதலால் அங்கக் கொடிய அழிவுக் காட்சி யாவருக்கும் நெடிய திகிலை விளைத் தது. தங்கள் பகையினம் பாழாவதை எண்ணிக் களித்தாலும் படுகொலைகளின் கிலைகளைக் கண்டு கேவரும் அஞ்சி நடுங்கினர். அச்சம் யாண்டும் நீண்டு பரவ அழிசாவுகள் உச்ச நிலையில் ஓங்கி வளர்ந்தன, பாவத்தி ன் கள் பா ழாப் மாய்ந்து மடிந்தன.