பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4974, கம்பன் கலை நிலை அநேகமாயிரம் விருதரை அளவறிந்து ஆர்கொலோ உரைக்கிற்பார்? பாரதம், 14ம்போர் 48) இராமன் கிருகரை அழிக்கபடியே விசயன் o விருகரை அழித்திருக்கிருன். அந்த அழிவு நிலையை அவ்வாறே இது விளக்கியுள்ளது. அழிவின் அளவு அதிசய விளைவாய் வந்தது. பேரொத்த ஆயிரம் பேர்மடிந்தால் பிறக்கும் கவந்தம் நேரொத்த ஆடும் அது ஆயிரம் ஆடின் நெடுஞ்சிலையில் ஏர்ஒத்த கிண்கிணி சற்ருேலிடும் அது ஒர் யாமம் நின்று கார்ஒத்த மேனி அரங்கர்தம் போரில் கறங்கியதே. (திருவரங்கத்துமாலை, 44) இராமபிரான் மூலபலக்கைக் கொன்று குவிக்க நிலையை இதுவும் குறித்திருக்கிறது. கடல்போல் மூண்டு வந்த அந்தச் சேனைகளை அழித்த ஒழிக்க ஏழரை நாழிகை பிடித்திருக்கிறது. போர் தொடங்கியதிலிருந்து கொலைகள் குவிந்துள்ளன. மேலே குறிக்க அளவு அழிவு அமைக்கவுடனே சிலையிலிருந்த மணி ஒலிக்க நேர்க்க து; அந்த ஒலி முடிவுவரையும் முழங்கி நின்றது. மிடல்கொள் மூலமா பலம் எனும் வீரரை விடுத்தான் கடிகை ஏழினில் இராகவன் அவருயிர் கவர்ந்தான்; கொடிய ராவணன் தேரிவர்ந்து அயிற்படை கொண்டு படைகள் சூழ்வரப் படுகளத்து எதிர்ந்தனன் படர்ந்தே. - (பாகவதம்) மூலபலச் சேனைகளை இராகவன் அழித்திருக்கும் அ5 தி) அளவை இதுவும் காட்டியுள்ளது. அளவிடலரிய படைகள் மாண்டு மடிந்துள்ள நிலைகளை ஈண்டு கெரிங் த வியப்பும் விம்மித மும் அடைந்த இராமனது வெற்றிக்கிறலேப் புகழ்ந்து நிற்கிருேம். தேவர் உவந்தது. யாவராலும் வெல்ல முடியாத பொல்லாத அரக்கர்குலம் எல்லை மீறி வந்ததைக் கண்டதும் நெடுந் திகில் கொண்டு கெஞ் சம் கலங்கி நிலைகுலைந்து நின்ற தேவர்கள் மூலபலம் முழுதும் அழிக்கதைத் தெளிவாய் அறிந்து ஆனந்தம் அடைந்தனர். கினேந்தது முடித்தேம் என்ன வானவர் துயரம் நீத்தார்; புனேந்தனென வாகை என்ன இந்திரன் உவகை பூத்தான்;