பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4990 கம்பன் கலை நிலை யிருக்கும் நிலைகளை இங்கே நாம் விழியூன்றி நோக்கி வியந்து நிற்கின்ருேம். தனது இனத்தின் அழிவு நிலை அவன் மனத்தில் சினத்தையும் துயரையும் சேர மூட்டியது. சுக்கிரீவன் அங்கதன் நீலன் முதலிய மேலான கலைவர்கள் எங்கும் உக்கிரவீரமாய் ஊக்கி ஏவி யிருக்கலால் வானா விரர்கள் யாண்டும் மூண்டு போராடி நின்றனர். அவரோடு நேரே சீறி அடலோடு பொருத கிருகர்கள் உடல் சிதைந்தும் கலைகள் உடைந்தும் கோள்கள் ஒழிந்தும் காள்கள் இழந்தும் இ ட ங் க ள் தோறும் மடிந்து மாய்ந்தனர். அரக்கர் திரள்கள் எங்கனும் இறக்க நேர்க்கன. அந்த அழிவு நிலை இலங்காதிபதியைக் கதிகலங்கச் செய்தது. எல்லாரையும் ஒல்லையில் ஒருங்கே வெல்லலாம் என்று உள்ளம் களித்து வந்தான்; அழிவுகளை விழி எதிரே காணவே ஆங்கார மும் அவமானமும் கோபமும் காபமும் கடிது ஓங்கி எழுந்தன. இனி இறைப் பொழுது கழிப்பின் கிருதர் உயிரைக் கூற்றுவன் உண்டுவிடும். தன் படைகள் சாவதை நேரே கண்ட இராவணன் இவ் வாறு கருதி விரைந்திருக்கிருன். கிமிட நேரம் தாமதித்தாலும் நிருகர் இனம் அடியோடு அழிக் த ஒழிக் த போம்; ஒருவரையும் உயிரோடு காண முடியாது என்று துயரோடு அவன் துடித் திருப்பதை ஈண்டு சாம் நுனித்து உணர்ந்து கொள்ளுகிருேம். வானரங்கள் அரக்கர்களை அடியோடு அழித்து விடுவர் என்று கூருமல் கூற்றுவன் உயிரை உண்டுவிடும் என்றது அழி வின் விரை வையும் ஒழிவையும் தெளிவாய்த் தெரியவந்தது. தனது அரிய விர க்குலக்கை எளிய காட்டுக் குரங்குகள் கொல்லும் என்று சொல்ல அவன் உள்ளம் கூசினமையால் கூற்றுவன் மேல் ஏற்றிக் கூறினன். குலமானமும் வீரமும் அவன் உள்ளத்தில் பலமாய்ப் பதிந்திருத்தலால் உரைகள் தோறும் செருக்குகள் பெருக்கமாய் உர மேறி வருகின்றன. கணத்திடை மடித்தே மீள்குவன் இராவணன் மனத்திடை கினைத்து வந்துள்ளதை இது உணர்த்தியுள்ளது. வான ப்படைகளை ஒரு கொடியில் கொன்று தொலைத்து வெற்றிக் களிப்போடு இலங்கைக்கு மீளுவேன்