பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4992 கம்பன் கலை நிலை இலக்குவன் இசைக்தான். மாருதி கோள் மேல் ஏறிய விரன் தனது வலது கையை உயரத் தாக்கி அசைத்து வானர சேனை களுக்கு ஆறுதலளித்துத் தேறுதல் தெளித்து ஆதரவு குறித்தான். எதிர்ந்து புகுந்தது. அபாயத்தை நோக்கி பாதும் அஞ்ச வேண்டாம் என்று உபாயமாய் அபயம் குறித்த அந்த வீரக் காட்சி அதிசய கம்பீரமாய்த் தோன்றியது. மறுகிய படைகளுக்கு உறுதியூட்டி எதிரிக்கு இறுதி காட்டி அடுகணை பூட்டி அமரிடை ஏறினன். இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி அரிகள் அஞ்சன் மின் அஞ்சன் மின் என்றருள் வழங்கித் திரியும் மாருதி தோள் என்னும் தேர்மிசைச் சென்ருன் எரியும் வெஞ்சினத்து இராவணன் எதிர்புகுந்து ஏற்ருன். ஏற்றுக் கோடலும் இராவணன் எரிமுகப் பகழி நூற்றுக் கோடியின் மேற்செலச் சிலைகொடு நூக்கக் காற்றுக்கு ஓடிய பஞ்சு எனத் திசைதொறும் கரக்க வேற்றுக் கோல்கொடுவிலக்கினன் இலக்குவன்விசையால். விலக்கி ன்ைதடங் தோளினும் மார்பினும் விசிகம் உலக்க உய்த்தனன் இராவணன் ஐந்தொடக் துருவக் கலக்கம் உற் றிலன் இளவலும் உள்ளத்திற் கனன் ருன் அலக்கண் எய்துவித் தான் அட லாக்கனே அம்பால். (3) காக்க லாகலாக் கடுப்பினில் தொடுப்பன கணேகள் நூக்கி ன்ைகனே நுறுக்கின்ை அரக்கனும் நூாழில் ஆக்கும் வெஞ்சமத் தரிதிவன் தனேவெல்வ தம்பால் நீக்கி என் இனிச் செய்வதென்று இராவணன் கினேந்தான். (வேல் ஏற்ற படலம் 18-21) இலக்குவன் ஒரு வில்லோடு செருவில் மூண்டு இராவண னேடு போராடி யிருக்கும் வீரப் பாடுகளை ஈண்டு விழைந்து நோக்கி வியந்து கிற்கிருேம். தன்னுடைய பாணப் பிரயோகங் களால் வானர சேனைகள் அழிந்து ஒழிக்கன என்று உள்ளம் களித்து ஊக்கி வந்த கிருதர்பதி இளவல் எதிர்ந்ததும் முனைந்து சினந்து மூண்டு பொருதான். வர பலங்களால் அடைந்திருந்த அம்புகளை மந்திர முறையோடு வாரிவிசினன். கூரியபானங்கள