பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5056 கம்பன் கலை கிலை விரைந்து செய்யவல்லது; யாரும் எதிரே தடை செய்யமுடியாத பேராற்றலுடையது. அந்த முனிவருடைய சாபச் சொல்லைப் போல் இராமனுடைய வில்லும் சரமும் என்றும் வெற்றி நிலையில் விறு கொண்டு யாண்டும் அதிசயங்களாய் நீண்டுள்ளன.

கின் கைச் சுடுசாம் அனேய சொல்” (இராமா, அகலிகை, 78)

கெளதம முனிவரது சொல் இராமபாணம் போல் அதிசய வலியுடையது என விசுவாமித்திர முனிவர் இக்கோமகனிடம் நேரே இங்கனம் கூறியிருக்கிரு.ர். சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் (தாடகை 71) வைவன முனிவர்சொல் அனேய வாளிகள். (அதிகாயன் 116) சொல்லும் சரமும் இவ்வாறுவெல்லும்விறலில்மருவிவந்துள்ளன. கிழிபடக்கடல் கீண்டது மாண்டது மொழிபடைத்த வலிஎன மூண்டது. (ஒற்றுக்கேள்வி 45.) முனிவரது சாபமொழிபோல் இராமபாணம் பெரு வலி யுடையது என இது குறித்திருக்கிறது. அம்மொழி எதையும் எளிதே அழிக்க வல்லது; இந்தப் பானமும் அவ்வாறே அழிவு களை அதிவிரைவில் ஆற்றி அதிசய வெற்றிகளே விளைத்துவிடுகிறது. சரம்தரு சாபம் அல்லால் தடுப்பரும் சாபம் வல்ல வரம் தரு முனிவன். (அகலிகை, 77) வில்லும் சரமும் சொல்லும் வரமும் இதில் தோய்ந்து வந் துள்ளன. சாபம்= வில், சபித்தல். இராமன் கைச்சாபம் முனி வர் வாய்ச்சாபம் போல் அதிசயங்களை ஆற்றியருள்வது எனக் காவியத்தில் இடங்கள் தோறும் புகழ்ந்து போற்றி வ ங் த வ ர் கிச் சிலை வழக்கை விளக்கினர். தமிழ் மொழியிலே மந்திரத்திற்கு இலக்கணம் கு றி க் கு ம் பொழுது முனிவர் மொழியையே தனி உரிமையோடு முதன்மையாக உரைத்திருக்கின்ருர். --- நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப. (தொல்காப்பியம்) மந்திரம் என்னும் இரகசியம் இங்கே இங்கனம் சிந்தனை செய்ய வந்தது. அதிசய மொழி விதிவழி விளைந்தது.