பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5079 டவா அ ரு ள் புரிந்து விரைந்து வேண்டியதை ஆற்றியருளுக என்று போற்றி கின்ருன். கேரில் வருகிறவனுடைய நிலைமையை நேரே தெரிந்து கொண்டான் ஆதலால் கால தாமதம் செய்யா மல் கடிது போரில் மூளும்படி இவ் வீரனே விரைவு படுத்தினன். கொற்றவ! என்று இராமபிரான விபீடணன் இங்கே குறித்து அழைத் திருப்பது கூர்ந்து சிங்திக்க வந்தது. முன்னம் வந்து தோல்வி யடைந்து போன இலங்கை வேந்தன் இன்று முடிவாப் மூண்டு வருகிருன்; அவனை விரைந்த முடித்தருள் என்.று வேண்டுகின் றவன் இவ்வாறு சிறந்த குறிப்போடு தாண்டி யிருக்கிருன். வெற்றி விரா என்.று விளிக்க வேண்டியவன் அவ்வாறு ". கூருமல் கொற்றவl எ ன் அறு குறித்திருக்கிருன். வெற்றிக்கும் கொற்றத்தக்கும் உள்ள வேற்.றுமை இங்கே உய்த்தனர வந்தது. உற்றமொழிகள் உரிய வழிகளில் வெளியாகின்றன. எதிரிகளை வென்று பெறுவது வெற்றி. அவரைக் கொன்று கொள்வது கொற்றம். இன்று அடைய மூண்டிருப்பது கொற்றமே ஆ த ல ல் கொற்றவ! என்று உற்ற உரிமை யோடு வெற்றி வீரனை விளித்து கின்ருன். விளிநிலை எதிரியின் அழி நிலையில் விழியூன்றி வந்தது. முன்பு வந்து மூண்டு பொருகவனே முழுகம் வென்று H விழுமிய வெற்றி வீரனப் நின்றவன் உற்ற பகைவனை நோக்கி இன்று போய் காளை வா! என்று இரங்கி வெளியே விட்டான்; அங்கனம் தொலைந்து போனவன் தெளிந்து தேர்ந்து சமாதான மாய் வாழாமல் மீண்டும் தீய நோக் கோடு மாய வஞ்சங்கள் பல புரிந்தான்; யாவும் பலியாமல் போயின; போகவே இறுதி யில் சாகத் துணிந்து அவன் உறுதியோடு வந்துள்ளான்; அவனே வேகமாய்க் .ெ க ர ன் று தொலைத்துக் கொற்றக் குரிசிலாப் விளங்கவுரிய வெற்றி விரனைக் கொற்றவ! என்று குறிப்போடு வேண்டி உற்ற நட்புரிமையில் அவன் உறுதி பூண்டு கின்ருன். இராமன் எழுந்தது. இலங்கை வேங்கன் நீண்ட படைகளோடு போருக்கு