பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5082 கம்பன் கலை நிலை காலன் என்று தொடர்ந்துள்ள தொனியில் எண்ணரிய நிலையில் இலங்கியிருந்த இலங்கைவேக்கன் அழிந்து படுவது துலங்கியது. சிகையை மடக்கொடி என்று இங்கே குறித்தது குணமும் அழகும் கருதி. மடம் என்னும் சொல் இளமை அறிவின்மை தரும நிலையம் முதலியவைகளை உணர்த்திவரும். மானைப் பிடித் துத் தா என்ற ம ட ைம ேய கொடிய துயரங்களுக்கெல்லாம் காரணம் ஆய துஆதலால் அங்தக் குறிப்பு இங்கே கூர்ந்து கான வந்தது. பூங்கொடிபோல் ஒல்கி ஒசியும் மெல்லிய தகைமையள் அல்லல் அடைய நேர்ந்தாள். அந்த அவல நிலையை உடையவன் சொல் இனிது உணர்த்தி உரிய நீர்மைகளை விளக்கி நின்றது. மடக்கொடி துயர்க்கும் வானின் உறைவோர்தம் இடர்க் கடலினுக்கும் இன்று முடிவு. வென்றிவிருேடு போர் மேல் எழுந்த இ ர | ம ன் அருகே கின்ற துணைவர் யாவரும் கேட்க இவ்வாறு கூறியிருக்கிருன். உரையின் உயிருணர்ச்சிகள் தெளிவா ஒளி விசி கிற்கின்றன. இன்று எதிரி செத்தான்; சமக்கு வெற்றி உறுதி என்று கூற வேண்டியவன்.அங்கனம் கூருமல் இங்கனம் கூறியுள்ளான். வெற்றி விரனுடைய உரைகள் உய்த்துணர்வு கோப்ந்து விநய வினையங்கள் வாய்ந்து வித்தக நிலையில் வெளிவந்துள்ளன. தேவர்களுடைய துயர்களைத் தீர்க்கவே அரசு முடிதுறந்து இராமன் காட்டுக்கு வங்கான்; அவனுடைய வினையாண்மைக் குத் துணையாக மனைவியும் இனமாய் ச் சேர்ந்து வந்தாள்; முன்ன தாக இலங்கை போய்ச் சிறைபுகுக் காள்; விண்ணரசு துயர்திரப் பெண்ணரசி துயர் கூர்ந்தாள் என்று ஞான யோகிகளும் துயர் கூரச் சானகி அயல் சார்ந்துள்ளமை ஒர்ந்து சிந்திக்க வுரியது. கரும விளைவாய் மருவியுள்ள அங்கத் துயரம் இன்று முடி வடைந்தது என்.று முடிவு கூறி இராமன் கடிது எழுந்தான். அல்லல்கள் யாவும் நீங்கித் தேவர்கள் சல்ல சுகமாய் வாழவும், கொடிய சிறையிலிருந்து சீகை விரைந்து வெளியேவாவும் இன்று உரிய சாளாய் நேர்ந்தது என்று கோதண்ட விரன் குறித்திருத் தலால் பகையின் முடிவு தொகையாய் அறிய வந்தது. உள்ளத் தில் துணிந்துள்ள துணிவு தெளிந்த வீர ஒளியாய் வி ள ங் கி கின்றது. பகையின் ஆவியை நீக்கித்தேவியைச் சிறைநீக்கினன்.