பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 478.1 உரைத்து ஊக்கி நின்ருன்: 'விர நாயகா! எதிரியின் போராடலை வியந்து காலம் கடத்தி கின்ருல் சாலவும் பிழையாம்; மாய வஞ் சங்களில் எதிரி அதிசய ஆற்றலுடையவன்; கேரைக் கடாவி வானில் செல்லினும் செல்லுவன்; போர்க்களத்திலிருந்தபடியே விரைந்து மறைந்து போப்க் கொடிய மாய வேலைகளைக் கடிது செய்யினும் செய்வன்; மேக மண்டலத்தில் ஒளிந்து கின்று கொண்டு நம்மை ஒழித்து விடும்படி திய மாயத் தீமைகளைச் க்ேகிரம் விளைத்து விடுவன்: வெளியே தப்பிப் போகாதபடி இவனை உடனே அழித்து விடுவதே நலம்; இரவில் இவன் சா கான்; விடியும் சமையம் நேர்ந்துள்ளது; பகலவன் தோன்றிய வுடனே இவனைத் தொலைத்து விழ்த்த வேண்டும்; அ.துவே 芯 தோன்றிய பயனும் தோன்றலே! ” என இன்னவாறு விபீட ணன் கூறவே வீர இளவலும் விரைவுநிலையை விருேடு கூறினன். இலக்குவன் குறித்தது. 'முடிவாக வந்து மூண்ட இவன் இனி மீண்டு போகான்; இந்தப் போர்க்களத்தை விட்டு பாண்டுப் போனலும் மாண்டே படுவான்; மாயமாய் மறைந்து போகும் இடம் எல்லாம் என் துனய பகழிகள் தொடர்ந்து போப் இவன் உயிாைப் பருகி வருமேயன்றி வறிது போகா, இந்த உண்மை யை நீ விரைவில் நேரே காணலாம்” என இவ் விரக் குரிசில் இங்கனம் கூறி முடித்துப் போரைத் தொடங்க நேர்க்கான். பொழுதும் விடிய நேர்ந்தது. கதிரவன் உதயம் கதி தர வங்தது. சூரியன் தோன்றியது. சிவந்த கிரனங்களை விசிச் சூரியன் கீழ் வானத்தில் இளர்ந்தது விரிய ஒளியாய் அன்று விளங்கி கின்றது. அவன் தேரில் தோன்றிய தோற்றம் போரில் கோன்றியவன் போலவே பொலிந்து விளங்கியது. அரிய விர குப் அவன் தெரியலாளுன். . அரக்கனேடு ஒத்து அருக்கன் உதித்தனன். இந்திர சித்தையும் சூரியனையும் நேர் கி.முத்திக் கவி இங்க னம் சுவையாக் காட்டியிருக்கிருர் காட்சியைக் கருதிக் காண் பவர் உருவ நிலைகளைக் கூர்ந்து ஒர்ந்து உவந்து கொள்வர். அருக்கன் = சூரியன். இருளை ஒழிப்பவன்; ஒளிபுரிந்து அருளைக்