பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4886 கம்பன் கலை நிலை போய்த் தடுத்து நிறுத்தவே மீண்டு வந்து ஒர் இடத்தில் அமர்ந்து கொண்டு தாங்கள் ஒடி ஒளிந்தமைக்குக் காரணக்கை எடுத்துக் காட்டிப் பூரணமாக விடுதலை செய்யும்படி மன்ருடி வேண்டு கின்றன. வேண்டுகோள் நீண்ட குறிப்போடு நேரே வக்கது. இருவர் விற்பிடித்து யாவரைத் தடுத்து கின்று எய்வார்? தங்கள் நிலைமையையும் எதிரிகளின் வலிமைகளையும் இங்க னம் குறித்திருக்கின்றனர். இராமன், இலக்குவன் என்னும் இரு வரே நமக்குக் கலைவர். இரண்டு பேரும் சிறங்க வில்லாளிகள், உயர்ந்த ேப ா ர் விரர்கள், அரிய பல வெற்றிகளைச் செய்து காட்டியிருக்கின்றனர்; ஆயினும் இப்பொழுது மூண்டு வருகிற சேன சமுத்திர ங்களின் எதிரே இவர் என்ன செய்ய முடியும்? என இன்னலுழந்து பன்னியிருப்பது உன்னியுணர வங்க.த. கடல்கள் கொங்களித்துக் கொதித்து வருவனபோல் படை கள் அடல் கொண்டு பாண்டும் நீண்டு எல்லை மீறி மூண்டு வரு கின்றன; அவற்றின் எ திரே கேவர் முதல் யாவரும் பாதும் செய்ய முடியாத, தேவதேவரான மூவருமே வெல்ல மு 12– யாது; அப்படியிருக்க மனிதர் இருவர் என்ன செய்ய முடியும்? என்று இப்படி நிலைகுலைந்து பேசியிருக்கின்றனர். வாய் மொழி கள் அவருடைய உள் ளத்திகில்களை நன்கு விளக்கியுள்ளன. அரக்கரைக் கடப்பார் மானுடர் கொல்? தேவர்களை வென்று யா வரையும் அடக்கி எல்லா உலகங் களையும் சம் ஆளுகைக்குள் ஆக்கிக் தலைமையோ டு வாழ்ந்து வரு கிற திருக ைமனிதர் வெல்ல முடியுமா? புல்வாய் புலியினங்களை வெல்லப் போனது போல் பனிகர் அரக்கரை வெல்ல வந்துள் ளனர்; வினே சாக மூண்டத போல் இது விவேகம் இல்லாத செயலேயாம் என மயலோடு மயங்கி உ யங்கி யுள்ளனர். ஊழிக்காலத்தில் உலகங்களை யெல்லாம் ஒருங்கே அழித்து ஒழிக்கின்ற உருத்திர மூர்த்தியும் இந்த மூலபலத்தில் வ ரு கின்ற ஒரு அரக்கனைக் கொல்ல வேண்டும் ஆனல் ஆயிரம் ஆண் டுகள் செல்லுமே! அத்தகைய கொடிய நெடிய அரக்கர்கள் கோடானுகோடியா ப்க் கடல்போல் கொதித்து வருகின்றனரே!