பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,916 கம்பன் கலை நிலை கருக்கி நிற்கும்போது இராமன் வில்லோடு வீர கம்பீரமாய்ச் செருமுனையில் ஏறினன். பசிய கோலத் திருமேனியனுப்த் தனியே எதிர்ஏறிவருகிற இவ்விர னக் கண்டதும் முன் அணியில் முதன்மையாய் நின்ற சிறந்த சேனைத் தலைவர்கள் யாவரும் திகைத்து வியந்தார். அந்த வியப்பினுல் பலவும் விளம்பினர். வியந்து மொழிந்தது. இரிந்த சேனை சிந்தி யாரும் இன்றிஏக கின்றுகம் விரிந்த சேனை கண்டு யாதும் அஞ்சலின்றி வெஞ்சரம் தெரிந்து சேவகம் திறம்ப லின்றி எய்து செய்கையான் புரிந்த தன்மை வென்றி மேலு நன்றுமாலி பொய்க்குமோ? (1) புரங்கள் எய்த புங்கவற்கும் உண்டுதேர் பொருந்தினர் பரந்த தேவர் மாயன் நம்மை வேர் அறுத்த பண்டைநாள் விரைந்து புள்ளின் மீது விண்ணு ளோர்களோடு மேவின்ை கரந்திலன் தனித்து ஒருத்தன் நேரும் வந்து காலின்ை. [2] தேரும் மாவும் யானே யோடு சீயம் யாளி ஆதியா மேரு மானும் மெய்ய கின்ற வேலை ஏழின் மேலவா வாரும் வாரும் என்றழைக்கும் மானுடர்க்கிம் மண்ணிடைப் பேரு மாறும் நம்முழைப் பிழைக்கு மாறும் எங்ங்னே? (3) (மூலபல வதை, 75-77) தனியே போர்க்களம் பு கு ங் த இராமனது விரத்திறலை நோக்கித் தானத் தலைவர் வியந்து பேசியிருக்கும் நிலைகளை இங்கே உவந்து பார்க்கிருேம். வானரங்கள் யாவும் ஒடிப் போயின; துணையாய் நின்ற எல்லாரும் பிரிந்து போயினர்; ஒரு வி ல் லே மாத்திரம் இடது கையில் வைக்கக் கொண்டு இந்த மனிதன் தன்னந்தனியனுய் வருகிருன்; கடல்போல் புடை சூழ்ந்த அடல் கொண்டுள்ள நம் படை வீரர்களைக் கண்டு யாகொரு கவலையும் கொள்ளாமல் யாவும் துச்சமாக எண்ணி உச்ச நிலையில் ஊக்கி நிற்கிருன், ஊர்தி ஒன்றும் இல்லை; பாதசாரியாகவே கடந்து வருகிருன்; முன்பு திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும் தேர் முதலிய தனைகளைக் கொண்டு சென்ருன்; பக்க வசதி யாதும் கருதாமல், ஏகொரு உதவியும் இல்லாமல் உள்ளமே துணையாய் இவன் ஊக்கி நேர்ந்துள்ளான்; யானே யாளி சிங்கம் முதலிய கமது படைத் திரள்களையும் நெடிய விரர்களையும் கடுகளவும்