பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4922 கம்பன் கலை நிலை மூண்டு நீண்டு கடந்த போராட்டங்களையும் அரக்கர் மாண்டு மடிந்துள்ள நிலைகளையும் இ ைவ காட்டியுள்ளன. அரிய வர பலங்களுடைய பெரிய கிருதர்கள் இங்கே போராடி யிருக்கின் றனர். எவ்வழியும் அ ட ர் ங் து தொடர்ந்து பல வகையான கொலைக் கருவிகளைக் கொதித்து வீசி யிருக்கின்றனர். எப்தும் எறிந்தும் எற்றியும் சுற்றியும் அவர் அள்ளிச் சொரிந்த படைக் கலங்களையெல்லாம் இக்க விர வள்ளல் அழித்து ஒழித்த யாவ ரையும் கொன்று தொலைத்து வென்றி விருேடு வீர விளையாடல் செய்து வருவதை நாம் வியந்து நோக்கி வெற்றித் திறலை உவந்து நிற்கிருேம். இக்குல மகனுடைய வில்லில் நின்று விளைந்து வெளி வருகிற அம்புகள் சென்ற இடமெல்லாம் அரக்கர் த லே க ள் துள்ளி விழுவதும், யானைகள் அழிந்து சாய்வதும், குதிரைகள் மடிந்து மாப்வதும், கேர்கள் உடைந்து உருள்வதும் தொடர்ந்த கொலைகளாய் நிகழ்ந்து வந்தன. உள்ளம் கடுத்து உருத்து மூண்டு கொதித்து அமராடிய அரக்கர் தலைவர்கள் காட்டுத்தியுள் அகப் பட்ட கொடிய விலங்குகள் போல் நிலைகுலைந்து மாண்டனர். ஒரு பகழி பல கலைகளை அறுத்து விழ்த்தி ஆகாயத்தில் ஒடுதலால் மலைகள்போல் கலைகள் எங்கனும் குவிந்து விரிந்து கிடந்தன. வில் அறுக்கும்; தலே அறுக்கும்; மிடல் அறுக்கும்; அடல் அறுக்கும். - என்ற கல்ை இராமசாங்கள் அ அறு க் து அழித்திருக்கும் அழிவு கிலைகளைத் தெளிவா அறிந்து கொள்ளுகிருேம். யாண்டும் தோல்வி காணுமல் எவ்வழியும் வெற்றியே கண்டு வ ங் த விர இராக்கதர்கள் திரள் திர ளாப் ஈண்டு மாண்டு மடிந்துள்ளனர். எய்ய எடுத்த வில் கையோடு கழிந்து விழுகிறது; விச எடுத்த வேல் தோளோடு தொலைந்து போகிறது; அடுத்து வந்த தாள் கடுத்து அழிகின்றது; சீறிப் பார்த்த க ண் சிதறி விழுகிறது; மீறிப் பேசிய வாய் நாக்கோடு நாசமாகிறது, கொலை கருதிய செஞ்சம் கிலே குலைந்து குலே துடித்து அழிகிறது; மேலேறி வந்த நால்வகைச் சேனைகளும் நாசமடைந்து விழ இவ்விரனது வில் அம்புகளை வீசி நின்றது. வீரப் பகழிகள் விளைத்து வந்த வெற் றித் திறங்கள் யாவருக்கும் வியப்புகளையே விரித்து நின்றன. செய்ய மள்ளர் கமலத்தோடு