பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5295 பரவிய விபீடணன்பொன் மகுடமுடி சூட் கின்ற படைளுரொடு ராவ ணன் தன் உறவோடே எரிபுகுத மாறில் அண்டர் குடிபுகுத மாறுகொண்ட ரகுபதி இராமசந்திரன் மருகோனே! (திருப்புகழ் 706) விபீடணனுக்கு முடிசூட்டி யருளியதை அருணகிரிநாதர் இவ்வாறு பாடியிருக்கிரு.ர். விர வள்ளல் உதவிய வெற்றிக், கொடை அதிசயம் உடையது ஆசலால் மேலோர் பலரும் இத %னத் துதிசெய்ய நேர்ந்தனர். அரிய பகையை வென்று பெரிய கேசத்தை உரியவனுக்குத் தந்ததில் உத்தம வீரமும் உயர்த்த வண்மையும் சக்திய நீர்மையும் ஒளி ஓங்கி நிற்கின்றன. அண்ணல் கூறிய படியே இளையவன் இலங்கை நகருள் புகுந்த இராச விதியிடையே கடந்து சென்று அரண்மனையை அடைந்தான். உம்பர் உலகம் என ஊர் பேரொளி விசியுள்ள தைக் கண்டு இ~வல் உளம் மிக மகிழ்க் கான். அரச மாளிகை புள் நுழைக்கால, எவ்வழியும் திவ்விய நிலைமைகளோடு தலை மையாய்த் தேசுமிகுந்து விளங்குவதை நோக்கி யாவரும் பேரு வகை கூர்ந்தனர். செல்வ வளங்களின் மாட்சிகளும், பல்வகை அழகுகளின் காட்சிகளும் பார்த்தவர் எவரையும் பரவசப்படுத்தி HIT MT ர்த்தைகளால் வரைந்து கூறமுடியாதபடி யாண்டும் சிறந்து தோன்றின.விழுமிய போகங்கள் விழிகளுக்கு விருந்து புரிந்தன. அதிசய எழில்களோடு துதி கொண்டு விளங்கிய அரச மாளிகை இடையே அரிய நவமணிகள் இழைத்த சிம்மாசனம் அமைந்திருந்தது. புனிதமான மங்கல கீர்த்தங்களால் முழுக்கு ஆட்டிய பின் உயர்ந்த உடைகளும் அணிகளும் புனைந்து விட ண ன அந்த அரியணையில் இருத்தினர். வான வேந்தன் முதலிய கலேவர் பலரும் புடை சூழ்ந்து கின்று பொலிந்து விளங்கினர். முடி குட்டியது. உயர்ந்த இரத்தின கிரீடத்தை இலக்குவன் இரு கைகளா மம் உரிமையோடு எடுத்தான்; எடுக்கும் பொழுதே இராமன் நிருவுருவத்தை உள்ளத்தில் கருதி உருகி மணிமகுடத்தை விபீட ண ன் கலையில் சூட்டினன்; எங்கும் மங்கல ஒலிகள் பொங்கி முழங்கின. அங்கங்கே உவகையான ஆரவாரங்கள் ஓங்கின.