பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5316 கம்பன் கலை நிலை ஒருங்கே கொல்ல வேண்டும் என்.று மாருதி விர வெறியோடு மூண்டது அவர் மேல் நீண்டிருந்த வெறுப்பையும் கொதிப்பை யும் நேரே விளக்கி அவரது தீமையையும் துலக்கி நின்றது. முன்பு தா ைவந்தபோது அங்கே காவலாயப் மேவியிருந்த அரக்கிகளுடைய இரக்கம் அற்ற நிலைகளையும் கொடுமைகளையும் கேரே மறைந்து பார்த்த கின்ருன். நமது இலங்கேசனுக்கு இனங்கவில்லை ஆல்ை இவளேக் கொன்று மென்று தின்.அறுவிட வேண்டும்” என்.று கன்றிக் கடுத்து வைது பழித்து வெய்ய துயரங்களைச் சீகைக்கு விளைத்தார் ஆகலால் அங்கப் பாதகிகளை அழித்த ஒழிக்க வேண்டும் என்று அனுமான் கோபமாய்க் கொதித்து மூண்டான். விரன் கொதிப்பு வியப்பாப் நீண்டது. சிறக்க விவேகமும் பெருக்ககைமையும் அருந்திறலான் மையும் அரிய போர் விரமும் நிறைந்துள்ள அனுமான் இங்கே பெண்களைக் கொல்ல விரைந்தது நம் கண்களுக்குப் பெரிய பிழையாய்த் தோன்றுகிறது; தோன்றினும் மூல காரணங்களை யும் மானச மருமங்களையும் சாம் ஊன்றி உணர்ந்து உண்மையை ஒர்க் த உறுதி கிலேயைத் தேர்ந்து கொள்ள வேண்டும். தன் கம்பைக் காத்து அம்புத நிலையில் அமர்ந்திருந்த உத்தம பத்தினிக்குக் கொடிய துயரங்களைச் செய் கதை நேரே கண்டி ருக்கான் ஆதலால் அந்த கெஞ்சக் கொதிப்பு ஈண்டு நீண்டு எரிய நேர்ந்தது; நேர வே அஞ்சனச் சிங்கம் வெஞ்சினமா அவரை அழிக்க நேர்த்தான். அல்லல் புரிந்தவரை க் கொல்ல விரைந்தான் அவன் கோர மாப் க் கொதித்துக் கூறவே அரக்கிகள் குலை நடுங்கி கிலைகுலைந்து நெடிது மருண்டனர். ஆவி அலமருகின்ற அவரை அருளுடன் நோக்கித் கேவி ஆறுதல் கூறித் தேறுதல் புரிக்கான்; அதன்பின் மாருதியை நோக்கி மதிமொழி கூறிஞள். என்ன தீமை இவர் இழைத்தார்? இாட்சசிகளைக் கொல்ல வேண்டும் என்று அனுமான் மூண்டபோது சீதை அவனேக் கடுத்து நிறுத்தி இப்படிக் கேள்வி கேட்டிருக்கிருள். இங்க வினவுக்கு விடைகூற நேர்ந்தால் அவன் கொண்ட கோபம் கனிந்து குனம் அடைந்து கொள்வான் என்று இக் குலமகள் கருதியுள்ளமை உரையில் மருவியுள்ளது.