7. இ ன் 5425 கங்கையோடு. யமுனேகோதா விரிநரு மதைகா வேரி பொங்குநீர் நதிகள் யாவும் படிதலால் புன்மை போகா சங்கெறி தாங்க வேலே கட்ட இச் சேது என்னும் இங்கிதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீக்குமன்றே. (6) ஆவினைக் குரவரோடும் அருமறை முனிவர் தம்மைப் பாவையர் குழுவை இன்சொற் பாலரைப் பயங்து கம்மின் மே.வின அவரைச் செற்றேர் விரிகடல் சேது வந்து தோய்வரேல் அவர்கள் கண்டாய் சுரர்தொழும் சுரர்கள் ஆ மாக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கிறித் தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகர் ஏனும் சாரின் பெருக்கிய ஏழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி நெருக்கிய அமார்க்கு எல்லாம் சீனிகி ஆவான்றே. நெற்றியின் அழலும் செங்கண் சீறணி கடவுள் நீடு கற்றையின் சடையில் மேவு கங்கையும் சேது வாகப் பெற்றிலம் என்று கொண்டு பெருங்தவம் புரிகின்ருளால் மற்றிதன் துாய்மை எவ்வாறுாைப்பது மலர்க்கண் வங்காய்! (9) விமானம் வானவிதியில் உல்லாசமாய் எழுந்து மேலேறி இலங்காபுரியைச் சுற்றி வட்டமிட்டுத் திட்டம் இட்ட படியே தென்கோடியில் கின்று வடபால் நோக்கிப் பறந்து வந்துள்ளது. அவ்வாறு வருங்கால் போர் கடந்த இடங்களையும், நேரே கிகழ்ந்த நிலைகளையும் கனக அருமைத் தேவியிடம் இராமன் உரிமையோடு உரைத்திருக்கிருன். மனைவி.பால் எவ்வளவு பிரிய மும் மரியாதையும் மதிப்பும் இக்கோமகன் வைத்துள்ளான் என்பதை உரைகள் தோறும் உய்த்து உணர்த்து கொள்கிருேம். இவ்வளவு உழுவலன்புடையவன் எவ்வளவோ வெறுத்து விட்ட வன் போல் முன்னம் கறுத்து நடித்திருப்பது இக்காவியத்தில் ஒரு மாய நாடகமாய் மருவி மருமங்களை விளக்கியுள்ளது. அரிய காரியங்கள் முடிந்துள்ள முடிவுகளை எல்லாம் இனிய துணைவி யிடம் உளம்மிக உவந்து உரைத் துவக்கான். உழு வலன்புகள் மொழிகள் தோறும் விழுமிய நிலையில் ஒளி வீசின. ஆகாய விதியில் வான ஊர்தி அதிவேகமாப் ஒர் அதிசய மான சூரிய மண்டலம் போல் சோதி வீசி வந்தது. கிழக்கே உதயம் ஆகி மேற்கு நோக்கி ஒளி பரப்பி வழக்கமாய் வருகிற கதிரவன் அன்று புதுமையாப் வடதிசை நோக்கி வருவது போல் எ ங் கு ம் பிரகாசமாய் ஒளி பொங்கி வர விமானம் வெளியே 679
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/315
Appearance