பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5476 கம்பன் கலை நிலை அவன் உள்ளம் பதைத்து உயிர் துடித்து அ ங் த இடத்தில் விழ்ந்து மூர்ச்சையாய்ச் சிறித போது கிடந்தான். பின்பு தெளிந்தான்; புலம்பி அழுதான்: "ஐயகோ எம்பெருமானே! என்னுல் உங்களுக்கு இந்த வெய்ய துயரங்கள் விளைங்துள்ளன வே, வையகம் முழுவதும் கண் என உயிர் எனக் கருதிப்பேனும் புண்ணிய மூர்த்திக்கு உடன் பிறக்க தம்பியே துன்பமாய்த் தோன்றினேனே, என் பிறப்பும் இருப்பும் எவ்வளவு இழிவுகள் உடையன எத்தனைப் பழிகள் வாய்ந்தன! நான் செத்து ஒழி a யாமல் உடலைச் சுமந்து உயிரோடு கிற்கின்றேனே; காட்டுக்கு வந்து கனியும் கிழங்கும் உனது இனிய வாப் தின்றது என்று கேட்டும் என் ஆவி கெட்டு அழியாமல் இந்தக் கூட்டுள் கூடி -யிருக்கின்றதே; அரிய மலர மளியில் இனிது துயில்கின்ற புனித தேகம் கல்லிலும் மண்ணிலும் புழுதிபடியப் படிக் த கிடந்தது என அறிந்தும் உடனே இறக்க போகாமல் இருந்தேன்; இருக் இன்றேன்; அந்தோ! ஆண்டவனே! உன்னை மீண்டும் காண லாம் என்ற ஆசையினலேயே மாண்டு மடியாமல் நீண்டு கிற் கின்றேன்; நான் உலகத்தை ஆண்டு வருவேன் என்ற அவல மதியால் கொடிய பாவி செய்த செடிய பாதகத்தை கி னே ங் து கி&னந்து என் நெஞ்சம் வேகின்றகே தெய்வமே' என்று இன்ன வாறு இன்னலுழத்த பாகன் பரிகாபமாய் மறுகி உருகி அழு திருக்கிருன்; ஆகவே அந்த உள்ளத்தில் ஊன்றியுள்ள சோகத் தின் வேகத்தை ஒரளவு நாம் உணர்ந்த கொள்ளுகிருேம். * } இராமன் முன்பு படுத்திருந்த இடத்தைப் பார்க்கவுடனே உள்ளம் துடித்து உயிர் பகைத்திருக்கிறது. குகன் சுட்டிக் காட் டிய அந்த இடத்தில் மெல்லிய புல்லுகள் சிகறிக் கிடக்கன: அவற்றைக் காணவே கண்ணிர் பெருகிவந்தது: 'அக்கோ இக் தத்தரையிலா அந்தச் சுகுமாரன் படுத்திருந்தான்? சக்கரவர்த் தித் திருமகன் படுத்திருக்ரும் பஞ்சணையா இது!’ என்று கெஞ் சம் கரைந்து நெடிது புலம்பி கினைவு கடுமாறி உருகியிருக்கிருன். வள்ளல் வைகிய பள்ளி கண்டான் என்ற தல்ை மு ன் பு கானகம் வந்தபோது சான கிதேவியோடு இராமன் இரவு உறங்கி யிருந்த இடத்தை ஒரு புனித நிலையமாகக் குகன் பாது காத் து வைத்துள்ளான் என்பது தெரிய வந்தது. அவ் வள்ளல் உள்ளம் அயர்ந்து உறங்கிய இடம் பள்ளி என உள்ளி உணர கின்றது.