பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5170 கம்பன் கலை நிலை கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னைப் பாலன் என்று இருந்தேன் அந்நாள் பரிசிவை உணர்ந்தி லேன்யான் மாலயன் தனக்கும் ஏனே வானவர் தமக்கும் யார்க்கும் == மூலகாரணமாய் கின்ற மூர்த்தி இம் மூர்த்தி அன்ருே. (1. ஒற்றென முன்னம் வந்தோன் ஒரு தனி வேலோன் தன்சீனப் பற்றி கல் இன்றி நின்ற பராபா முதல்வன் என்றே சொற்றனன் சொற்ற எல்லாம் துணிபெனக் கொண்டிலேல்ை இற்றையிப் பொழுதில் ஈசன் இவன் எனும் தன்மை கண்டேன். (2 ஆயிரம் கோடி காமர் அழகெலாம் திரண்டுஒன் ருகி மேயின எனினும் செவ்வேள் விமலமாம் சரணம் தன்னின் து.ாயகல் எழிலுக்கு ஆற்ருது என்றி.டின் இனேய தொல்லோன் மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார் (8 இங்கெனது உயிர்போல் உற்ற இளவலும் இளேய சேயும் செங்கையில் வேலோன் தன்னேச் சிறுவன் என்று எண்ண ல்கண்டாய் பங்கயன் முதலோர் காணுப் பரமனே ஆகும் என்ருர்; அங்கவர் மொழிந்த வாறும் சரதமே யான தன்றே. (4 அண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடிவின் காஅறும் எண்ணிலா ஊழி காலம் எத்திறம் நோக்கி லுைம் கண்ணினல் அடங்கா துன்னின் கருத்தில்ை அடங்காது என்பால் கண்ணின்ை அமருக் கென்கை அருள் என நாட்ட லாமே (5 திருகிய வெகுளி முற்றம் தீர்க்தன. செருவின் ஊக்கம் அருகியது a-33 ոտա புள்ளி ஆயின விழியில் துரநீர் பெருகியது இவன் பால் அன்பு பிறந்தன.தமியேற்கு உள்ளம் உருகியது என்பு தானும் உலேமெழு காகும் அன்றே. (6 போயின. அகந்தை போதம் புகுந்தன. வலத்த தான து.ாயதோர் தோளும் கண்ணும் துடித்தன புவனம் எங்கும் மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படு கின்ற விண்ணுேர் நாயகன் வடிவம் கண்டேன் கற்றவப் பயனி தன்ருே? (7 சூழுதல் வேண்டும் தாள்கள்; தொழுதிடல் வேண்டும் அங்கை; தாழுதல் வேண்டும் சென்னி; துதித்திடல் வேண்டும் தாலு: ஆழுதல் வேண்டும் தீமை அகன்று.கான் இவற்கு ஆளாகி வாழுதல் வேண்டும் நெஞ்சம்; தடுத்தது மானம் ஒன்றே. (8 கந்தபுராணம், சூரபன்மன் வதை) இந்தப் பாசுரங்களைக் கூர்க்க பார்ப்பவர் .aհա பல உண் மைகளையும், அதிசயமான மருமங்களையும் ஒர்ந்த கொள்ளுவர்.