பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1082 கம்பன் கலை நிலை

சென்று வாழ்பொருள் என்றது உலாவித் திரிகின்ற உயிரி னங்களை. கின்று வாழ்பொருள் என்றது இடம்பெயாாது கிலைத்து நிற்கும் காவாங்களே. இவை முறையே இயங்கு கிணே, கிலைக்

திணை எனப்படும். உலகிலுள்ள சராசரங்கள் எல்லாம் என்றபடி.

--- i so o - -- so in in H என் கண் எதிரே தோன்றும் பொருள்கள் யாவும் அப் பெண் உருவ மாகவே பெருகியுள்ளன என்று மறுகி கின்றான்.

பொருள் எலாம் அவள் போன் உரு ஆயவே என்றமையால் அவ் வுருவெளித் தோற்றத்தின் பெருவெளி தெரிந்தது. அவள்

என்றது என் கண்கள் விழுங்கிய அக் கட்டழகி என்றவாறு.

அக்கன்னியின் திருமேனி நிறம் பொன்னின் சோதி யாய்ப் பொலிவெய்தியுள்ளமையான் இன்னவாறு குறிக்கான். பொருள் பொன் ஆயது என்றது ஒரு நயம். மாடு ஆடு மாம் கல் முதலிய

யாவும் பொன்மயமாகவே தோன்றின என்பதாம்.

சீதையைக் கண்டது முதல் அவளேயே கருதி யிருக்கான் ஆதலால் தன் கண்ணுள்ளும் எண்ணுள்ளும் அவ்வுருவமே கலந்து கின்றது ; ஆகவே உலகில் காணும் பொருள்க ளெல்லாம் அவளாகவே தோன்றலாயின என்க.

எண்ணக் கடிப்பால் கண்ணெதிரே தோன்றும் இவ்வண்ண வடிவை உருவெளித்தோற்றம் என்பர். இங்கனம் தோன்றவே அவ் அங்க அவயவங்களை யெல்லாம் வியந்து நோக்கிக் காதலர் மயங்கிப் புலம்புவர்.

பைங்கண் மணிமகர குண்டலமும் பைங்தோடும் திங்கள் முகத்திலங்கச் செவ்வாய் எயிறிலங்கக் கொங்குண் குழல்தாழக் கோட்டெருத்தம் செய்தகோக்கு எங்கெங்கே நோக்கினும் அங்கங்கே தோன்றுமே.

(சிச்தாமணி, 1971)

விமலையைக் கண்டு காதல் கொண்ட சீவகன் கூறியது.

சேனும் திகழ்மதிற் சிற்றம் பலவன்தெண் ணிர்க்கடல்கஞ்சு ஊணும் திருத்தும் ஒருவன் திருத்தும் உலகின்எல்லாம் காணும் திசைதொறும் கார்க்கய லும்செங் கனியொடுபைம் பூணும் புணர்முலை யும்கொண்டு தோன்றுமொர் பூங்கொடியே, (கிருக்கோவையார்)