பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 1127

சனகனது மறுமொழி வில்லும் காண்பார் என்று தொடங்கிக் கோசிகர் சொல்லி வந்தவற்றை யெல்லாம் உள்ளம் களித்து மாந்தி உவந்து விழைங் துள்ள சனகன் முனிவருக்கு இனி மறு மொழி கூறவேண்டும்.

மன்னவன் ஈண்டு என்ன பேசியுள்ளான் ? என்று நாம் எதிர்பார்க்கிருேம். பேச வுரியன யாவை? என ஆசையுடன் எண்ணி நோக்குகின்றாேம். எதிர்மொழி முதிர் விழைவாயது.

தவசியின் கருத்தை அவருடைய உரைகளால் அரசன் நன்கு உணர்ந்து கொண்டான். ‘இராமனுக்கு உன் மகளாகிய சீசையை மணம் செய்து கருக’ என்னும் அளவில் மொழிகள் குறிப்பாக வெளி வந்துள்ளன. அவர் உரைக்கு யாதும் மறுக்க முடியாது. உடனே இசையவும் இசைவில்லை.

இக்க நிலையில் சனகன் பதில் உாைக்கிருக்கிருன். அவனது விகய வார்க்கை தனி நயமுடையது. அதி நாகரீகமாய் உணர்வு நலம் சாந்துள்ளது. மன்னன் பேசி யிருப்பதைப் பாருங்கள் !

மாற்றம்யா துரைப்பது மாய விற்கு நான் தோற்றவா றென.மனம் துளங்கு கின்றதால் கோற்றனள் கங்கையும் கொய்தின் ஐயன்வில் ஏற்றுமேல் இடர்க்கடல் ஏற்றும் என்றனன்.

(கார்முகப்படலம், 1) கோசிகர் முன்னம் பேசியவற்றிற்குச் சனகன் இவ்வாறு பதில் கூறியிருக்கிருன். அங்கப் பேச்சிற்கும் இக் கப் பதிலுக் கும் என்ன சம்பந்தம் : இராமனுடைய குலமுறையையும் குண நலங்களேயும் விழைந்து கூறினரே யன்றி க் கலியானத்தைப்பற்றி வெளிப்படையாக முனிவர் யாதும் பேசவில்லை. இருந்தும் மன் னன் இன்னவாறு திருமண உரிமையை உரை செய்துள்ளான்.

அறிவாளிகளுடைய உரைகளில் சுவையும் மணமும் மிகவும் கமழ்கின்றன. புக்தி துட்டமான உய்த்துணர்வுகள் உள்ளே பதிந்து உவகை கிலையமாய் மொழிகள் ஒளிசெய்து மிளிர்கின்றன. தவசி கலைஞானங்களில் கலை சிறந்தவர். அரசன் மெய் யுணர்வுடைய நல்ல ஆசா சீலன். இருவரும் உரைகள் வழங்கி இங்கே பண்ட மாற்றுச் செய்கின்றார், காரியக் குறிப்புக்களைக் கூரிய மதிநலத்துடன் காட்டிச் சீரிய கிலேயில் செயலாற்றி யுள்ள னர். இருவர்மொழிகளிலும் அறிவுமணம் பெரிதும் கமழ்கின்றது.