பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா t t i 119.3

ஒழிக்கற்கு வாள் கொண்ட கண்ணுர் என அவ் விழி ஒளியை விளக்கி யருளினர்.

வாள் = ஒளி, பிரகாசம். வாளே ஒக்க கண் எ னின், . If: வாசகமாய்ப் புற வடிவில் படிந்து பொலிவிழந்து போம் ; அங்

foL

கனம் போகாமல் அக ஒளியின் தகவுனா மிக நுணுகி வந்துள்ள

உயரியல்பினை ஊன்றி புணர்ந்து கொள்க.

மிதிலை மங்கையர் யாவரும் நல்ல கூரிய சீரிய பார்வை யுடையவரே : அந்த ஒளி மிகுங்க கண்ணழகிகளும் இராமனது வண்ண வடிவங்களை முழுவதும் காண முடியாமல் கண்ட அளவி லேயே மண்டிக் களிப்புற்று கின்றார் என்க.

அங்க அதிசய அழகை இங்கனம் துதி செய்த கவி முடிவில் குறித்துள்ள முடிவு கெடிதுனாவந்தது. ஊழ்கொண்ட சமயத்து அன்ன்ை உருவ கண்டாரை ஒத்தார்.’

இது ஆழ்க்க உணர்வுக்காட்சி. அதிமதி நுட்பமான கத்துவ கோக்குடையது. உலக அனுபவங்கள் பலவும் கிறைந்தது.

இராமனது வடிவழகை முழுதும் காணமாட்டாமல் கண்ட ஒவ்வொன்றிலேயே கண்டமாய் மகளிர் களித்து கின்றமைக்கு அகண்ட உவமையாய் வந்துள்ள இதனை ஒரளவு கண்டு மேலே போவோம்.

கடவுளும் சமயமும்.

உயிரினங்களுள் மனிதன் பெரிதும் அறிவுடையவன். முன் னும் பின்னும் எண்ணி நோக்குகின்றான். கண்கண்டதை எண் கொண்டு கருதி ஆய்கின்றான். சீவ கோடிகள் பல தோன்றி மறை கலை ஊன்றி ஒர்கின்றான். சூரிய சந்திார்கள் நேரிய முறையில் நேர்ந்து ஒளிசெய்தலையும், காரியங்கள் யாவும் சீரிய கிலையில் கிகழ்ந்து உலகம் இயங்கி வரு கலையும் பார்க்கின்றான். தான் விரும்பியன பல விலகி ஒழிதலையும், விரும்பாதன விரைந்து புகுதலையும் அறிகின்றான். இப்படி அரிய கிலைகள் பலவும் நோக்கி அதிசயித்து இவற்றிற்கெல்லாம் மூலமுகலாய் எல்லை கடக்க போாற்றலை யுடைய ஒரு பொருள் எவ்வகையினும் தில்விய நிலையில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்து கொண் டான். அக்க மதியின் கொள்கையே மதம் என வந்தது.

150