பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1245

காஜல நாலு நாழிகை யாகவே பல இடங்களிலுமிருத்த சனத் திாள்கள் வந்து கொண்டிருக்கன. மிதிலைமா நகரம் எங்கும் அதிசயமான இன்பக் காட்சிகளும் மங்கல ஒலிகளும் மருவி ஒங்கின. குறுகிலக் கிழவரும், சிற்றரசர்களும், பெருகில வேக் கரும் கத்தமக்குரிய ககுதிகளோடு கலியான மாளிகையை நெருங்கினர். வாகன வரிசைகள் வகை வகையாய் வந்தன.

தேர்மிசை வருவாரும், சிவிகையில் வருவாரும், ஊர்தியில் வருவாரும், ஒளிமணி கிரை ஒடைக் கார்மிசை வருவாரும், க்ரினியில் வருவாரும் பார்மிசை வருவாரும் பண்டியில் வருவாரும் : (1) விடங்கர் விழியாரும் அமுதெனும் மொழியாரும் கிடைபுரை இதழாரும் கிளர்நகை ஒளியாரும் தடமுலே பெரியாரும் தனியிடை சிறியாரும் பெடையன நடையாரும் பிடிஎன வருவாரும்: (2) உண்ணிறை கிமிர்செல்வம் ஒரு துறை செலஎன்றும் கண்ணுறல் அரிதென்றும் கருதுதல் அரிதம்மா I எண்ணுறு சுடர்வானத்து இந்திரன் முடிகுடும் மண்ணுறு திருநாளே ஒத்தது அம் மனநாளே. (3) இன்னவாறு எண்ணிடலசிய இன்ப நலங்களுடன் விண்ணவர் உலகம் என மிதிலைமாககரம் அன்று விளங்கி யிருந்தது. அாச குழாம் நிறை செய்து வரவே அரசர் பிரானகிய தசரதன் உரிய பரிவாாங்கள் புடை சூழ அரிய ஆடம்பரங்களுடன் எழுந்து, கலியான மண்டபத்தை அடைங்து, கனக்கு என அமைக்கிருந்த அரியாசனத்தில் அமர்ந்தான்.

அனேயவன் மண்டபம் அணுகி அம்பொனின் புனைமணி ஆதனம் பொலியத் தோன்றின்ை முனைவரும் மன்னரும் முறையின் ஏறினர் சனகனும் தன் கிளை தழுவ ஏறினன். (1) மன்னரும் முனிவரும் வானு ளோர்களும் அன்னமென் னடையணங் கனேய மாதரும் துன்னினர் துவன்றலிற் சுடர்கள் கும்வரும் பொன் மலே ஒத்ததப் பொருவில் கூடமே. (2) எண்தவ முனிவரும் இறைவர் யாவரும் அண்டரும் பிறரும்புக் கடங்கிற்று ஆதலின் மண்டபம் வையமும் வானும் வாய்மடுத்து உண்டவன் மணியணி உதரம் ஒத்ததே. (கடிமணம், 41-48)