பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1248 கம்பன் கலை நிலை

இன்னணம் ஒளிர்தர இமைய வர்க்கெலாம் தன்னேயே அனேயதோர் கோலம் தாங்கினுன் பன்னக மனிவிளக் கழலும் பாயலுள் அன்னவர் தவத்தில்ை அனங்தல் நீங்கினன். (11) முப்பரம் பொருளிற்குள் முதலே மூலத்தை இப்பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை அப்பனே அப்பினுள் அமிர்தம் தன்னேயே ஒப்பனே ஒப்பனே உரைக்க ஒண்னுமோ ? (12)

(இக்கப் பன்னிாண்டு பாடல்களையும் கண்ணுான்றிப் படித்து நோக்கின் உருவின் கோலங்கள் இனிது உணரலாம். அலங்காா வகைகளைக் குறித்து வருங்கால் மணமகனுடைய திவ்விய மகிமை கள் செவ்வி.கா விளக்கப்பட்டுத் கெய்வமணம் கமழ்ந்துள்ளன.

கற்பனைகள் யாவும் அற்புத நிலையில் விளைக்கிருக்கின்றன.

1. நல்ல பிச்சி மாலையை மயிர் முடியில் குட்டினர். அக் காட்சி, கருங்கடல் வெள்ளிய கிங்களைப் பூக்கதுபோல் விளங்கி இருந்தது. கரிய கடல் என்ற கல்ை அக்கொண்டையின் கிற மும் பெருமையும் அறிய கின்றன. தலைமயிாை முதலில் குறித் தது அதன் நிலைமை கருதி. உச்சி முதல் உள்ளங்கால் வரை யும் வருணிக்கத் தொடங்கினர். கருத்துக்கள் எல்லாம் உச்ச நிலையில் உருக்கொண்டு உணர்வு சாந்து வந்துள்ளன.

காவிய நாயகனுடைய வடிவும் வண்ணமும் எழிலும் இய லும் கவியினுடைய உள்ளத்தைப் பாவசப்படுத்தி மிளிர்கின்றன.

2. கருமத்தைப் பரிபாலிக்கும் பொருட்டு கருனேயே ஒர் உருவுகொண்டு வந்ததுபோல் இராமன் அவதரித்திருக்கின்றான். மனித உருவில் அப்புனிதன் மருவியிருத்தற்கு உரிய காாணத் தை இடங்கள்தோறும் கவி இனிமை கனிய உணர்த்தி வருகிரு.ர். அறமும் அருளும் பெருகி ஆன்மகோடிகள் யாண்டும் மேன்மை யடையவே பாம்பொருள் ஈண்டு இவ்வுருவில் ஒளி செய்துள்ளது என அளி செய்து மகிழ்கின்றார். உருவ ஈலனைக் கருதுந்தோறும் உள்ளம் உருகி மொழிகின்றார் உணர்வு கனிந்து உள்ளன்பு சாங்து வருதலால் உசைகள் எங்கனும் பாம இன்பம் பெருகி எழுகின்றன. அலங்கார வசனங்கள் கவியின் உளம் காண ஒளிர்கின்றன. புயல் உருவகம் இயல் உரிமையாய் வருகின்றது.